உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் கால்பந்து விளையாட்டான 'ஃபுட்சல் லீக்' போட்டிகளை 'பிரீமியர் புட்சல்' என்ற பெயரில் துவங்க உள்ளனர். அதற்கான அறிவிப்பை வெளியிடும் விழா' இன்று சென்னையில் நடைபெற்றது. இதற்கான பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அந்தப் பாடலை இந்திய டெஸ்ட் கேப்டன் விராட் கோலி, பாட உள்ளார். அவர்தான் இந்த போட்டிக்கு பிராண்ட் அம்பாசிடராகவும் உள்ளார்.
இன்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விராட் கோலி, '' நாங்கள் சிறுவயதில் இருந்து இவரது பாடல்களைதான் கேட்டு வளர்ந்து இருக்கிறோம். அவரது பாடல்கள் இல்லாமல் இளம் வயது கடந்ததில்லை. அவரது இசையில் பாடுவது என்றவுடன் சற்றுப் பயமாகதான் இருந்தது. ஆடுகளங்களில் பயந்ததே இல்லை. ஆனால் இவர் இசைக்கு பாடுவது அவ்வளவு பயத்தை ஏற்படுத்தியது. ஆனால் எளிமையான வரிகளால் எனது சுமையை ரஹ்மான் சார் குறைத்துவிட்டார்" என்றார். மேலும்," கிரிக்கெட் போட்டிகளின் போது தேசியக் கீதம் பாடப்படும். அதற்கு பிறகு ஆடும் போது இவரது வந்தே மாதரம் பாடல் தான் கேட்கும். அது தரும் எனர்ஜியை யாராலும் தர முடியாது" என ஏ.ஆர் ரஹ்மானை புகழ்ந்து பேசினார் கோலி.

மேலும் பிரீமியர் ஃபுட்சல் அமைப்பின் நிர்வாகிகள் பேசும்போது, இந்தியாவில் மிக வேகமாக, வெறும் 15 நிமிடங்களே நடக்கும் இந்த ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்றும், இன்று பெரிய அளவில் இருக்கும் கால்பந்து வீரர்களுக்கு ஃபுட்சல்தான் அடையாளம் தந்தது என்றும் கூறினர்.
மேலும் மொத்தம் 8 அணிகள் கலந்து கொள்ளும் இந்த விளையாட்டுக்கான விவரங்கள், வீரர்கள் விவரம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும் என்றனர்.
பின்னர் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், " சமீபகாலமாக விளையாட்டுத் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு இசையமைத்து வருகிறேன். பிடித்திருக்கிறது அதனால்தான் இதற்கும் ஆர்வத்துடன் சம்மதித்தேன். மேலும் விராட், நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். நான் உங்களுக்கு எளிமையாக இருக்குமாறுதான் இசையமைத்துள்ளேன்" என்றார்.
பின்னர் கேள்வி பதில் நேரத்தில், விராட் கோலியிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார்.
உங்கள் பாடும் திறன் பற்றி சொல்லுங்கள்? யார் உங்களது ஃபேவரைட் பாடகர்?
நான் சுமாரான பாடகன்தான். மோசமாகப் பாட மாட்டேன். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், நான் பாடுவேன். எனக்கு பிடித்தப் பாடகர் அரிஜித் சிங். எனக்குப் பாடுவது பிடித்த, மகிழ்ச்சியான விஷயம்

ஃபுட்சல் பற்றி கூறுங்கள்?
ஃபுட்சல் இந்தியாவில் நல்ல வரவேற்பைப் பெறும். பெரிய வீரர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இளம் வீரர்களை அடையாளம் காணவும் உதவும். ஏற்கெனவே ஐ.ஏஸ்.எல் போன்ற லீக்குகள் போட்டிக்கான ஆர்வத்தை தூண்டும். இங்கு பொழுதுபோக்கும் ஸ்கில்லும் அதிகம் இருப்பதால் இது பெரிய வரவேற்பை பெறும்.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் உங்கள் ஃபார்ம்? 5 பவுலர் ஸ்ட்ராடஜி பற்றிக் கூறுங்கள்?
அடுத்த இரண்டு மணி நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாது. நீங்கள் அடுத்த மாதம் நடக்கவிருப்பதை கேட்டால் எப்படி கணிக்க முடியும்?. அதோடு 5 பந்துவீச்சாளர் உத்தி பற்றி எனக்கு தற்போது எதுவும் கூறும் ஐடியா இல்லை. தொடரின்போதுதான் யோசிக்க வேண்டும். அப்படியே இப்போது கூறினால் அது எதிரணிக்கு பலமாக மாறிவிடும் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.