Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 12, 2016

விஜயகாந்த், பிரேமலதா மீது 49 வழக்குகள் வாபஸ் பெற்றால் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு?


தமிழகத்தில், கடந்த, 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,வும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இருந்தன. ஆனால், அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில், கூட்டணிக் கட்சிகளை உதறி விட்டு, அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றியது.

கடந்த, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டு, 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், 232 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, 134 இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இப்படி தொடர்ந்து, மூன்று தேர்தல்களிலும் பெரிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல், தனித்து போட்டியிட்டு, அ.தி.மு.க., 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. அதேபோல், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலிலும், அதிக இடங்களை கைப்பற்ற, ஆளுங்கட்சி களத்தில் இறங்கிஉள்ளது.

ஆனால், சட்டசபை தேர்தல் மூலம், தி.மு.க.,வின் பலம் அதிகரித்து உள்ளது. அதனால், உள்ளாட்சி தேர்தலில், தி.மு.க., கடும் நெருக்கடி கொடுக்கும். எனவே, இந்த தேர்தலை அ.தி.மு.க., தனித்து போட்டியிடுமா அல்லது கூட்டணியில், சில கட்சிகளை சேர்த்து கொள்ளுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில், மக்கள் நலக் கூட்டணியில் இருந்து, வெளியேற தே.மு.தி.க., திட்டமிட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க., அரசை தேர்தல் நேரத்தில் கடுமையாக விமர்சித்த வகையிலும், ஜெயலலிதா வின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும்வகையிலும் பேசியதாக, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மீது, 36 வழக்குகளும், அவரது மனைவி பிரேமலதா மீது, 13 வழக்குகளும் உள்ளன.அந்த வழக்குகளை சந்திக்க, பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதால், ஆளுங்கட்சியுடன் இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவும், அடக்கி வாசிக்கவும், விஜயகாந்த் தரப்பில் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்த வழக்குகளை வாபஸ் பெறுவதாக இருந்தால், உள்ளாட்சி தேர்தலில், ஆளுங்கட்சியை ஆதரிக்கவும், தே.மு.தி.க., தயாராக இருப்பதாக, அக்கட்சி வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. இந்த தகவல், தே.மு.தி.க.,வில் இருந்து, அ.தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவர் மூலமாக, அ.தி.மு.க., தலைமைக்கு துாது அனுப்பும் முயற்சியும் துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.