Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

அடிபட்டு விழுந்த ஹீரோ போல எழுந்து விளாசுவார் விஜயகாந்த்: பிரேமலதா


திரைப்படங்களில் வில்லனிடம் அடி வாங்கி விழுந்து திரும்ப எழுந்து விளாசுவதைப்போல், விஜயகாந்த் மீண்டும் அரசியலில் வெற்றி பெறுவார் என பிரேமலதா கூறியுள்ளார்.

காரைக்குடியில் தேமுதிக பிரமுகர் இல்லத்திருமணம் ஒன்றில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திப்பேசினர்.

பிரேமலதா பேசுகையில், '' நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தோல்வி அடைந்ததால், சோர்வடைந்து விட்டதாக கூறுகின்றனர். விஜயகாந்த் திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கும்போது, முதலில் வில்லனிடம் அடி வாங்கி, அடி வாங்கி கீழே விழுவார். பிறகுதான் எழுந்து நின்று திரும்ப விளாசுவார்.

அதேபோல், விஜயகாந்த் மீண்டும் எழுந்து வருவார். தேமுதிக வெற்றி பெறும். விஜயகாந்த் எப்போதும் எதிர்நீச்சல் போட்டுத்தான் வாழ்க்கையில் வெற்றிபெற்றிருக்கிறார். கடந்த தேர்தலில் தேமுதிக எடுத்த முடிவு தமிழகத்துக்கும், தமிழக மக்களுக்கும் நல்லதை நினைத்து எடுத்த முடிவு. விரைவில் மக்கள் அதை உணர்ந்து நம் பக்கம் திரும்புவார்கள்.

ஆண்டவன் நல்லவர்களுக்கு சோதனை தருவார். ஆனால், கைவிட மாட்டார். கெட்டவர்களுக்கு அள்ளி அள்ளி கொடுப்பார். ஆனால், கைவிட்டு விடுவார். எனவே, நமது பயணத்தில் நாம் உறுதியாக இருப்போம்'' என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.