‘‘லண்டனில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க என்னை அழைத்தனர். நான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல’’ என்று தொழிலதிபர் விஜய் மல்லையா கூறியுள்ளார்.
இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கி கடன் மோசடியில் சிக்கி உள்ளார். தற்போது அவர் லண்டனில் வசிக்கிறார். அவரை தேடப்படும் குற்றவாளியாக மும்பை நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் வளாகத்தில் கடந்த வியாழக்கிழமை புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அதில், இந்திய தூதரக அதிகாரி நவ்ஜீத் சர்னா பங்கேற்றார். அந்நிகழ்ச்சியில் விஜய் மல்லையா வந்திருப்பதை அறிந்த இந்திய தூதரக அதிகாரி சர்னா உடனடியாக வெளியேறினார்.
ஆனால், புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘யாருக்கும் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை. புத்தக வெளியீட்டு விழா குறித்து ட்விட்டரில்தான் விளம்பரம் செய்திருந்தோம்’’ என்று விளக்கம் அளித்தனர். அதேபோல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘புத்தக வெளியீட்டு விழாவுக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் விஜய் மல்லையாவை அழைக்கவில்லை. அவராக வந்துள்ளார். சமூகவியலாளர் சுஹெல் சேத் எழுதிய புத்தகத்தை வெளியிட்டது இங்கிலாந்து அமைச்சர் ஜோ ஜான்சன். அதன்பிறகு நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டவர்கள் பட்டியலில் மல்லையா பெயர் இல்லை என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெளிவாக கூறியுள்ளனர்’’ என்று தெரிவித்தது.
இந்நிலையில், தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக விஜய் மல்லையா கூறியுள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் விஜய் மல்லையா வெளியிட்ட பதிவில், ‘‘என் வாழ்நாளில் அழைக்காமல் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. இனிமேலும் அழைக்காமல் செல்ல மாட்டேன். நான் ஒன்றும் அழையா விருந்தாளி அல்ல. புத்தகத்தை எழுதியவர் என் நண்பர். என் மகளுடன் நிகழ்ச்சிக்கு சென்று அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அதன்பிறகுதான் ஊடகங்கள் ஊகங்களின் அடிப்படையில் தலைப்பு செய்திகளாக வெளியிட்டன’’ என்று கூறியுள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.