ஒலியை விட 3 மடங்கு வேகமாக சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை வியட்நாம் உட்பட 15 நாடுகளுக்கு விற்பதற்கான முயற்சிகளை இந்தியா எடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய எல்லை பகுதிகளில் சீனா ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. காஷ்மீரை ஒட்டியுள்ள எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய கடல் பகுதியிலும் சீன போர்க்கப்பல்கள் அடிக்கடி ரோந்து செல்கின்றன. இலங்கை துறைமுகத்தில் நீர்மூழ்கி கப்பல்களை நிறுத்துகிறது. பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை செய்கிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளை பாதுகாக்க முயற்சிக்கிறது. என்.எஸ்.ஜி அமைப்பில் இந்தியா இடம் பெற எதிர்ப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்கா மற்றும் வியட்நாமுடன் இந்தியா ராணுவ உறவை பலப்படுத்தினால், சீனா விரும்பத்தகாத வகையில் எதிர்ப்பை தெரிவிக்கும் என இந்தியா முன்பு கருதியது. ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான குழுவினர், அந்த சிந்தனையை தூக்கி எறிந்தனர். சீனாவுக்கு எதிராக உள்ள அமெரிக்கா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளுடன் வலுவான ராணுவ உறவை ஏற்படுத்தினால்தான் சீனாவை வழிக்கு கொண்டுவர முடியும் என கருதினர்.
தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா போன்ற நாடுகளுக்கு சீனாவுடன் எல்லைப் பிரச்னை உள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்தியா-ரஷ்யா கூட்டு தயாரிப்பில் உருவான பிரமோஸ் ஏவுகணைகளை விற்கும்படி வியட்நாம் கடந்த 2011ம் ஆண்டு முதல் வேண்டுகோள் விடுத்து வருகிறது. 290 கி.மீ தூரம் சென்று தாக்கும் பிரமோஸ் ஏவுகணைகளை நிலத்திலிருந்து, கப்பல் மற்றும் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்தும் பயன்படுத்த முடியும்.
வியட்நாமுடன் இந்தியா ராணுவ உறவுகளை வளர்த்து வருகிறது. அந்நாட்டு கடற்படைக்கு தேவையான ரோந்து படகுகளை 100 மில்லியன் டாலர் கடனில் இந்தியா வழங்குகிறது. தற்போது வியட்நாமுக்கு பிரமோஸ் ஏவுகணைகளை விற்பதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இது இந்தாண்டு இறுதியில் முடிவடையும் என கூறப்படுகிறது. பிரமோஸ் ஏவுகணைகளை ஏவக்கூடிய போர்க்கப்பலை வியட்நாமுக்கு விற்பது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.