புதுச்சேரி கோடீஸ்வரர் ராஜகோபால் நடத்திவரும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் 'நான் கொடுத்த லிஸ்ட் படி மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும்' என்று மாயமான வேந்தர் மூவிஸ் மதன் கடிதம் எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் வேந்தர் மூவிஸ் லெட்டர் பேடில் எழுதிய கடிதம் வாட்ஸ் அப்பில் பரவியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 29ம் தேதி வேந்தர் மூவிஸ் மதன் தனது லெட்டர் பேடில், 'காசியில் கங்கையில் சமாதி அடையப் போகிறேன்' என்று கடிதம் எழுதி அதனை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுவிட்டு தலைமறைவானார். அந்தக் கடிதத்தில், எஸ்.ஆர்.எம். கல்லூரியில் தன் மூலம் வந்த மாணவர்களுக்கு 'சீட்' கொடுக்கவேண்டும் என்றும் அவர்களிடம் முழுமையாகப் பணம் வாங்கி, அந்தப் பணத்தை உரியவர்களிடம் கொடுத்தும் விட்டதாகக் குறிப்பிட்டு இருந்தார்.மேலும், தனக்கு மிகப்பெரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன என்றும் அவற்றை பாரிவேந்தர் தீர்த்துவைக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் மதன் கூறியிருந்தார்.
இதனால் தமிழ் சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டது. மதன் மாயமானதால் அதிர்ச்சியான அவரின் குடும்பத்தினர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் மதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் அதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிகையை எடுக்கவேண்டும் என்றும் புகார் மனுக்கள் அளித்தனர்.
இதனையடுத்து எஸ்.ஆர்.எம். நிறுவனங்களின் தலைவரும் ஐ.ஜே.கே. கட்சியின் நிறுவனத் தலைவருமான பாரிவேந்தர் மதன் குறித்து அறிக்கைகள் வெளியிட்டார். அவற்றில் தனக்கும் வேந்தர் மூவிஸ் நிறுவனத்திற்கும் தொடர்பில்லை என்றும் மதன் எங்களது பெயரை பயன்படுத்தி பணமோசடி செய்துள்ளார் என்றும், அவர் ஐ.ஜே.கே. கட்சியில் இருந்து ஏற்கெனவே நீக்கப்பட்டுவிட்டார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் மதன் மீது பாரிவேந்தர் சார்பில் போலீசில் புகாரும் செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் ஒருமாதம் ஆனநிலையில் வேந்தர் மூவிஸ் மதன் எங்கு இருக்கிறார் என்று இன்னமும் கண்டுபிடிக்க இயலவில்லை.
இந்நிலையில், வேந்தர் மூவிஸ் மதன் புதுச்சேரி கோடீஸ்வரர் ராஜகோபால் என்பவருக்கும் கடிதம் எழுதியுள்ளார் என்றும் அதில் தான் கொடுத்த மாணவர்கள் லிஸ்ட் படியே சேர்க்கை நடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார் என்று தகவல்கள் வாட்ஸ் அப்பில் பரவிவருகிறது.

புதுச்சேரி ராஜகோபால், ஸ்ரீ பாலாஜி கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை என்ற பெயரில் அறக்கட்டளை நிறுவி அதன் கீழ் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மருத்துவம்,பொறியியல் கல்லூரிகள் நடத்திவருகிறார். அந்தக் கல்லூரிகளில் ஒரு மருத்துவ சீட்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.80 லட்சம் வரை பணம் வசூலிக்கப்படுகிறது என்று புகார்கள் கிளம்பின. இதனால் கடந்த 24ம் தேதி, வருமானவரித்துறை அதிரடி சோதனை நடத்தி ரூ.52 கோடிகளைக் கைப்பற்றியது.
இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள் ராஜகோபாலுக்கு மதன் எழுதியதாகக் கூறப்படும் கடிதம் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.