Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

வீரப்பனை சுட்டுக்கொன்றது எப்படி? 1000 பக்கங்களில் புத்தகம் எழுதும் விஜயகுமார்!


தமிழகம்,கேரளா மற்றும்  கர்நாடக மாநில அரசுகளுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவாலாக விளங்கிய சந்தனக் கடத்தல் மன்னன் வீரப்பனை அதிரடிப்படை எப்படி சுட்டுக் கொன்றது என்று விளக்கும் வகையில் புதிய புத்தகம் ஒன்றை எழுதவுள்ளதாக முன்னாள் அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகம், கர்நாடகம், கேரளா ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் 20 ஆண்டுகளுக்கும்  மேலாக கடத்தல் சாம்ராஜ்யம்  நடத்திய  வீரப்பனை அதிரடிப்படை கடந்த 2004ம் ஆண்டு அக்டோபர் மாதம் 18ம் தேதி காட்டுக்குள் சுட்டுக் கொன்றது.

இந்த அதிரடி நடவடிக்கை காவல் அதிகாரி விஜயகுமார் தலைமையில் நடந்தது. இவர் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தின்  மூத்த பாதுகாப்பு ஆலோசகராக இருந்து வருகிறார். இவர் வீரப்பனை சுட்டுக் கொன்றது பற்றி, சுமார் 1000 பக்கங்கள் வரையுள்ள புத்தகத்தை  சுவாரஸ்ய அதிரடி திகில் சம்பவங்களோடு  எழுதிவருகிறார்.


இது பற்றி விஜயகுமார் கூறுகையில், ‘‘வீரப்பன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதைச்  சரியாகவும்  முறையாகவும் கூறுவதே எனது நோக்கம். 10 மாதம் திட்டமிடப்பட்டு அந்த  ஆப்ரேஷனை வெற்றி கரமாக நடத்தினோம்.  அதிரடிப்படையின் ஒவ்வொரு  நிகழ்வுகளும் காலவரிசைப்படி புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும். இது உண்மையான கதையாக இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.