டாஸ்மாக் மதுக்கடையை சுடுகாட் டில் திறக்கலாம் என காங்கிரஸ் உறுப்பினர் எச்.வசந்தகுமார் (நாங்குநேரி) யோசனை தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று ஆளுநர் உரை மீதான விவாதத் தில் அவர் பேசியதாவது:
மீண்டும் முதல்வராக பதவி யேற்ற முதல் நாளிலேயே 5 முக்கிய உத்தரவுகளை பிறப்பித்த ஜெயலலிதாவை பாராட்டுகிறேன். தமிழக அரசு 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்துள்ளது. ஆனால், சென்னையில் எனது வீடு அருகே மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியில் அமைந்துள்ள டாஸ் மாக் கடை அகற்றப்பட வில்லை. இதனால் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர். போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, மது பற்றிய அச்சத்தை ஏற்படுத்தவும், மது குடித்தால் என்ன கதி ஏற்படும் என்பதை புரிய வைக்கவும் சுடுகாட்டில் டாஸ்மாக் மதுக் கடையை திறக்க வேண்டும்.
நாங்குநேரியில் உயர் தொழில் நுட்பப் பூங்கா அமைக்க வேண்டும். தமிழ் மொழியில் படித்தவர் களுக்கு அரசு வேலை வாய்ப் பில் முன்னுரிமை அளிக்க வேண் டும். திரைப்படத் தொழிலைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்களை பழங் குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். நாடார், யாதவர், கவுண் டர் சமுதாயத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும்.
இவ்வாறு வசந்தகுமார் கூறினார்.
வசந்தகுமார் பேசும்போது குறுக்கிட்ட மதுவிலக்கு, ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்க மணி, ‘‘காங்கிரஸ் உறுப்பினர் சுடுகாட்டில் டாஸ்மாக் கடை திறக்க வேண்டும் என்கிறார். சட்டப் பேரவையில் பேசுகிறோம் என் பதை உணர்ந்துதான் பேசுகிறாரா என்பது புரியவில்லை. தமிழகத் தில் காலை 12 மணிக்கு மதுக் கடை திறப்பதை அவர் குறை கூறுகிறார். ஆனால், காங்கிரஸ் ஆட்சி நடக்கும் புதுச்சேரியில் காலை 8.30 மணிக்கு மதுக்கடைகளை திறந்து விடுகிறார்கள்’’ என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.