Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

வங்கி கடனை திரும்ப செலுத்தாதவர் கணக்கிலிருந்து பணம் எடுக்கலாம்: அதிரடி தீர்ப்பு!


வங்கியில் வாங்கிய கடனை சரியாக திரும்ப செலுத்தவில்லை என்றால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது .

கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் வேலைப் பார்த்து ஓய்வு பெற்ற ஊழியரும், அவரின் மகனும் சேர்ந்து 75,000 ரூபாயை விவசாய கடனாக, பொதுத்துறை வங்கி ஒன்றில் வாங்கியுள்ளார். அந்த கடனை 2 ஆண்டுகள் சலுகை காலம் முடிந்து, 2015, ஏப்ரல் மாதத்திலிருந்து 10 தவணைகளாகத் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், கடனை வாங்கிய மின்வாரிய ஊழியரும், அவரின் மகனும் செலுத்தவில்லை. இதற்கிடையே மின் வாரிய ஊழியரின் பென்சன் தொகை வங்கியில் கிரெடிட் ஆனதும் வங்கி அதை கடனுக்கு ஈடாக எடுத்துக் கொண்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ''வங்கியின் பல நினைவூட்டலுக்கு பிறகும் கடனை செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் தொகையை எடுக்கலாம்'' என தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதனுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி பிடித்த கடன் தொகையை திரும்ப பெறலாம் எனவும், அவ்வாறு வாங்கும் பட்சத்தில், மனுதாரர் வாங்கிய கடனை அவரும், அவரின் மகனும் திரும்ப செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.