க்ரைம் பாட்ரோல் என்கிற இந்தி தொலைக்காட்சி தொடரை பார்த்துவிட்டு வாலிபர் ஒருவர் 13 வயது சிறுவனை கடத்தி கொலை செய்துள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜலோர் மாவட்டத்தில் உள்ள சஞ்சோர் நகரை சேர்ந்தவர் நரேந்திர சிங்(19). அவர் பிரபல இந்தி தொலைக்காட்சி தொடரான க்ரைம் பாட்ரோலை தொடர்ந்து பார்த்து வந்துள்ளார்.
அந்த தொடரில் வந்த குற்ற சம்பவத்தை பார்த்துவிட்டு அவர் பவேஷ்(13) என்கிற சிறுவனை தனது நண்பர் முகேஷ் மோசியின்(18) துணையோடு கடத்தினார். மும்பையில் வசித்து வந்த பவேஷ் விடுமுறையை கழிக்க தனது மாமா வீட்டிற்கு வந்த இடத்தில் கடந்த மாதம் 5ம் தேதி கடத்தப்பட்டார்.
பவேஷின் சகோதரி மும்பையில் இருந்து போன் செய்தபோது அதை நரேந்திர சிங் எடுத்து உங்களின் சகோதரர் பத்திரமாக கிடைக்க வேண்டும் என்றால் ரூ. 5 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டார். அதன் பிறகே பவேஷ் கடத்தப்பட்டது தெரிய வந்தது.
ஒரு வாரம் கழித்து விவசாய நிலம் ஒன்றில் தெரு நாய்கள் ஒரு இடத்தை தோண்டி அங்கு பாதி அழுகிய நிலையில் இருந்த உடலை கடித்துக் குதறின. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அந்த உடல் பவேஷுடையது என்பது தெரிய வந்தது. ஆனால் அவரை யார் கொலை செய்தார்கள் என்பது தெரியாமல் போலீசார் குழம்பி வந்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் நடந்து ஒரு மாதம் கழித்து 2 வர்த்தகர்கள் தங்களிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு யாரோ போன் மூலம் மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் அந்த செல்போன் எண்ணை வைத்து நரேந்திர சிங்கை கண்டுபிடித்து விசாரித்தபோது அவர் பவேஷை கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.
Read more at: http://tamil.oneindia.com/news/india/tv-serial-incites-teen-kidnap-murder-13-yr-old-255955.html

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.