Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

நாட்டிலேயே முதல்முறையாக அரசு சொகுசு பஸ்சில் இருக்கையின் பின்புறம் டிவி


நாட்டிலேயே முதல்முறையாக அமராவதி சொகுசு பஸ்களில் பயணிகள் இருக்கையின் பின்புறம் டிவி மற்றும் விஜயவாடா ஜவகர்லால் நேரு  பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள திரை அரங்கத்தை முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று திறந்து வைத்தார். பொதுவாக தொலைதூர  பயணத்தின்போது பஸ்களில் ஒன்று அல்லது இரண்டு டிவிகள் வைத்து திரைப்படங்கள் காட்டப்படுவது வழக்கம். தற்போது, ஆந்திர மாநில போக்குவரத்து  கழகம் பெரும்பாலான இடங்களில் வை-பை வசதிகள் செய்துள்ளது. இதன் மூலம் அமராவதி சொகுசு பஸ்களில் உள்ள ஒவ்வொரு இருக்கையின்  பின்புறமும் டிவிக்கள் பொருத்தப்பட்டு தொலை இயக்கி மூலம் பயணிகள் தங்களுக்கு தேவையான சேனல்களை பார்க்க வசதியை அறிமுகம் செய்துள்ளது.

முதல்கட்டமாக 80 அமராவதி சொகுசு பஸ்களில் பயணிகள் இருக்கையின் பின்புறம் டிவி பொருத்தி உள்ளது. இனிவரும் காலங்களில் இத்திட்டம்  விரிவாக்கம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதேபோல், விஜயவாடா மாவட்டம், ஜவகர்லால் நேரு பஸ் நிலையத்தில் மல்டி பிளக்ஸ்  காம்பளக்ஸ் திரையரங்கம் ஒய் ஸ்க்ரீன் தனியாருடன் இணைந்து திரை அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இந்த இரு திட்டங்களையும் முதல்வர் சந்திரபாபு  நாயுடு நேற்று தொடங்கி வைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.