மதுரை வெற்றிலை பேட்டை ஏ.ஆர். பான் பீடா கடையில், ஆட்டோவில் வந்த நபர் வைத்துவிட்டு சென்ற அட்டை பெட்டியில் பைப் குண்டு, டிபன்பாக்ஸ் டைம் பாம் கண்டெடுக்கப்பட்டது. இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் செயல் இழக்கப்பட்டது. 25 நாட்கள் இடைவெளியில் மீண்டும் டைம் பாம் வைத்திருப்பது போலீசாரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மதுரை பாண்டிய வேளாளர் தெருவைச் சேர்ந்தவர் பரீத்கான்,33. உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இவர், மதுரை முனிச்சாலை ரோடு - வெற்றிலை பேட்டை சந்திப்பு அருகே பீடா கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஆட்டோவில் வந்த 30 வயதுள்ள ஒருவர், பரீத்கானின் தம்பி மன்சூர்கானிடம் 10 பீடாவுக்கு ஆர்டர் கொடுத்தார். பின்னர் ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்து வருவதாக கூறிச் சென்றவர் திரும்பிவரவில்லை. இரவு 11:00 மணிக்கு கடையை அடைப்பதற்காக பரீத்கான் வந்தபோது, 'கேரி பேக்கில்' அட்டை பெட்டி ஒன்று இருந்ததை கண்டார். தம்பியிடம் கேட்டபோது, பீடா விலை கேட்டவர் வைத்து விட்டு சென்றதாக தெரிவித்தார். அதை திறந்து பார்த்தபோது, பிளாஸ்டிக் பைப் குண்டு மற்றும் டிபன் பாக்ஸில் டைம் பாம் இருந்தன. இதுகுறித்து விளக்குத்துாண் போலீசிற்கு தகவல் தெரிவித்தார். வெடிகுண்டு தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார், செயல் இழக்கச் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
'ஆன்' செய்யாத 'சுவிட்ச்' : இரவு 1:30 மணி வரை ஒவ்வொரு உதிரிபாகங்களாக செயல் இழக்க செய்தனர். முதற்கட்ட விசாரணையில், இரு குண்டுகளும் வெடிக்க செய்யும் வகையில் 'செட்' செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. டைம் பாமில் எந்த நேரத்தில் வெடிக்க வேண்டும் என்று 'செட்' செய்யப்பட்ட போதிலும், அதன் சுவிட்சை 'ஆன்' செய்யாமல் விட்டதால் வெடிக்கவில்லை. ஒருவேளை 'ஆன்' செய்யப்பட்டிருந்தால், குறிப்பிட்ட நேரத்தில் வெடித்து, அதன் வெப்பத்தால் பைப் குண்டில் இருந்த 200 கிராம் கரிமருந்தில் தீப்பிடித்து அதுவும் வெடித்திருக்கும் வகையில் குண்டு வடிவமைக்கப்பட்டிருந்தது.
கேமராக்கள் எங்கே? : இப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் இருந்தன. சில நாட்களுக்கு முன் அவை செயல்படவில்லை எனக்கூறி, பழுது பார்ப்பதற்காக எடுத்துச் சென்றதால், ஆட்டோவில் வந்தவர் யார் என கண்டறிவதில் போலீசார் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதே ஸ்டைலில்தான் கடந்த ஜூன் 3ல் மதுரை யானைக்கல்லில் லாரிக்கு அடியில் டைம் பாம் வெடிக்க செய்யப்பட்டது. மதுரையில் சில ஆண்டுகளாக நடந்த வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி.,யிடம் இவ்வழக்கும் ஒப்படைக்கப்பட உள்ளது.
ஒரே ஸ்டைல் : இதுவரை கைப்பற்றிய குண்டுகள் அனைத்தும், டைமர், பேட்டரி, மின் ஒயர், கரிமருந்து என ஒரே 'ஸ்டைலில்' இருப்பதால், 'குறிப்பிட்ட நபர்களே இதில் ஈடுபட்டிருக்க வேண்டும்' என போலீசார் முடிவுக்கு வந்துள்ளனர். அவர்கள் யார் என்று போலீசிற்கு தெரிந்தும், ஆதாரமின்றி பிடித்து விசாரிக்க போலீசார் தயங்குகின்றனர். இதனால்தான் 12 வெடிகுண்டு வழக்குகளை சி.பி.சி.ஐ.டி., வசம் மதுரை போலீசார் ஒப்படைத்துள்ளனர். இவ்வழக்குகளை 10 இன்ஸ்பெக்டர்கள் விசாரித்து வரும் வகையில், திருவாதவூர் பஸ்சில் டைம் பாம் கண்டெடுத்த வழக்கில் தெப்பக்குளம் தமிழன் தெரு உமர்பாரூக்,35, என்பவரை கடந்த ஜூன் 5ல் சி.பி.சி.ஐ.டி., கைது செய்தது. இவருக்கு நேற்றுமுன்தினம் நடந்த சம்பவத்திலும் தொடர்பு உண்டா என விசாரணை நடக்கிறது.
குண்டு வைப்பது இங்கு சகஜம் : மதுரையில் குண்டு வைப்பது சகஜமாகிவிட்டது. * 2011ம் ஆண்டு ஏப்.,30ல், மதுரை மாட்டுத்தாவணி டாஸ்மாக் கடையில் 'டைம்பாமை' வெடிக்க செய்தனர். அதே ஆண்டு செப்.,30ல், புதுார் பஸ் டெப்போவில், பஸ்சிலிருந்து 'டைம்பாம்' கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்த நிலையில், மதுரையில் ஊழலுக்கு எதிரான பிரசாரத்தை பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி மேற்கொண்டார். அவர் செல்ல திட்டமிருந்த திருமங்கலம் அருகே ஆலம்பட்டி ஓடைப்பாலத்தின் அடியில் சக்திவாய்ந்த இரு பைப் வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. * 2011 டிச.,7ல் திருவாதவூர் பஸ்சில் 'டைம்பாம்' கண்டெடுக்கப்பட்டது.* 2012 மே 1ம் தேதி அண்ணாநகர் ராமர் கோயில் சுற்றுச்சுவரையொட்டி நிறுத்தியிருந்த சைக்கிளில் 'டைம்பாம்' வெடித்தது. நவ.,2ல் திருப்பரங்குன்றம் மலையில் 'டைம்பாம்' உதிரிபாகங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
* கடந்தாண்டு செப்.,30ல் ஆரப்பாளையம் அரசு பஸ்களில் டைம்பாம் வெடித்தன.
மதுரையில் மட்டும் ஏன் : கடந்த 2014ம் ஆண்டு பிப்.,11ல், மதுரை உத்தங்குடி தனியார் வணிகவளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட இரும்பு பைப் வெடிகுண்டு தவிர, மற்ற குண்டுவெடிப்பு, குண்டு கண்டெடுப்பு சம்பவங்களில் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2002ல், மதுரை இமாம்அலி மற்றும் அவரது கூட்டாளிகள், பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அப்போது அவரது ஆதரவாளர்களில் சிலர், ஒரு அமைப்பை உருவாக்கி செயல்பட துவங்கினர். இதற்கு அரசு தடைவிதித்தது. இதுநாள் வரை அந்த அமைப்பினர் மறைமுகமாக செயல்படுகின்றனர். இதன் ஆதரவாளர்கள்தான் தொடர்ந்து குண்டு வைத்திருக்க வேண்டும் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கண்டெடுக்கப்பட்ட குண்டானது சமீபகாலமாக மதுரை நகரில் கண்டறியப்பட்ட அதே வகையை சேர்ந்ததாக உள்ளது. இதுகுறித்து பொது மக்களுக்கு தகவல் தெரிந்தால், நகர் குற்றப்பிரிவு உதவிகமிஷனர் ஜோஸ் தங்கையா 94458 19721, விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் பரவாசுதேவன் 83000 03368, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் செந்தில் இளந்திரையன் 94981 79727 ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கலாம்'' என தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.