Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 10, 2016

ரகுராம் ராஜனின் டைம்பாம் டிசம்பரில் வெடிக்கும்..! சுப்பிரமணியன் சுவாமி பகீர்


ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் இந்திய நிதி அமைப்பில் 'டைம் பாம்' வைத்துள்ளார். இது டிசம்பரில் வெடிக்கும் என்று பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் மீது புகார் தெரிவித்து பா.ஜனதா  மூத்தத் தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, கடந்த மாதம் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ‘ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையாக இந்தியர் அல்ல. அவர் இந்திய பொருளாதாரத்தை சீரழிக்க தவறான வழிகளில் செயல்படுகிறார். அவரை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

மேலும், ரகுராம் ராஜனின் குடியுரிமை பற்றியும் சர்ச்சையை எழுப்பிய சுப்பிரமணியன் சுவாமி, "அமெரிக்காவின் கிரீன் கார்டு வைத்துள்ள ரகுராம் ராஜன் மனதளவில் முழுமையான இந்தியர் அல்ல. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினார். இந்த சர்ச்சைக்குரிய கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், “ரகுராம் ராஜன் இந்திய குடிமகன்தான். அவர் இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.

இந்தநிலையில், ரகுராம் ராஜன் இந்திய நிதி அமைப்பில் 'டைம் பாம்' வைத்துள்ளார், அது வரும் டிசம்பர் மாதம் வெடிக்கும் என்று சுப்பிரமணியன் சுவாமி ட்விட்டரில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.