Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

மறுவாக்கு எண்ணிக்கை... திருமாவளவன் வழக்கு தொடுப்பது பயன் அளிக்காது! -வைகோ


மறுவாக்கு எண்ணிக்கை கோரி திருமாவளவன் வழக்கு தொடுப்பது பயன் அளிக்காது என்று வைகோ தெரிவித்து உள்ளார்.

ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் எஸ்.துரைசாமி தலைமையில், கட்சியின் தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ முன்னிலை வகித்தார். துணை பொதுச் செயலாளர்கள் மல்லை சத்தியா, துரை பாலகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களிடம் வைகோ கூறும்போது, ''தமிழக மீனவர்களும் இந்திய பிரஜைதான். எந்த ஒரு பிரஜைக்கு ஆபத்து ஏற்பட்டாலும் இந்திய அரசு பாதுகாக்க வேண்டும். மீனவர்கள் பிரச்னை என்று பார்க்காமல், ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கு ஏற்பட்ட பிரச்னையாக பார்த்து, மொத்த தமிழகமும் எதிர்த்து போராடும் நிலை வர வேண்டும்.

இந்த தேர்தலில் எல்லா தொகுதிகளிலும், வசதி படைத்தவர்கள், வசதி படைக்காதவர்கள் என பார்க்காமல் இதுவரை நடக்காத வகையில் சில இடங்களில் அ.தி.மு.க. அதிகமாகவும், சில இடங்களில் தி.மு.க. அதிகமாகவும் என ரூ.500 முதல் ரூ.5,000 வரை பணம் விநியோகம் செய்துள்ளன. முழுக்க முழுக்க பணம் தான் இந்த தேர்தலை தீர்மானத்தது.

இந்த அநீதியை எதிர்த்து போராடும்போது, உடனடியாக வெற்றி பெற முடியாது. தேர்தலில் எங்கள் கட்சி தோல்வியைத் தழுவினாலும், ம.தி.மு.க. தொண்டர்கள் யாரும் துவண்டுவிடவில்லை. ம.தி.மு.க.வினர் மனஉறுதி மிக்கவர்கள். தேர்தலில் தோல்வி அடைந்தாலும், அவர்கள் இன்னும் உற்சாகமாகத்தான் இருக்கின்றனர்.

நாங்கள் போராளிகள், அநீதிகளை எதிர்க்க துணிந்தவர்கள். அதனால், நாங்கள் தொடர்ந்து போராடி ஜனநாயகத்தை மீட்டு எடுப்போம். நாங்கள் தொடர்ந்து மக்கள் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்து வருகிறோம். மீண்டும் மக்களிடத்தில் செல்வோம்.

தொல்.திருமாவளவன் போட்டியிட்ட தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பது பயனளிக்காது. இதுபோன்று நீதிமன்றத்திற்கு போன வழக்குகளில் 4½ ஆண்டுகளுக்கு பிறகு, அடுத்த தேர்தலின் போதுதான் தீர்ப்புகள் வந்துள்ளன" என்றார்.

மேலும் இந்த கூட்டத்தில், தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி-த.மா.கா. மாற்று அரசியல் அணிக்கு 26 லட்சத்து 18 ஆயிரத்து 250 வாக்குகள் (6.4 சதவீதம்) அளித்துள்ள தமிழக மக்களுக்கு ம.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத பேரவலமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் திட்டமிட்ட வகையில் வீடுதோறும் சென்று வாக்காளர்களுக்கு ஆயிரக்கணக்கில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதை தடுக்க தவறிய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பணநாயகத்தை முறியடித்து ஜனநாயகத்தை நிலைநாட்டவும், ஊழல் கறை படிந்துள்ள அரசியல் களத்தை தூய்மைப்படுத்தவும், தே.மு.தி.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகளுடன் கரம் கோர்த்து மக்கள் பணிகளை தொடர்வது, உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.