Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

சைவம்... அசைவம்...முன்னணியில் இருப்பது எந்தெந்த மாநிலங்கள் தெரியுமா?


 நாட்டில் அசைவம் உண்பவர்களில் அதிகம்பேர் கொண்ட மாநிலமாக தெலங்கானா மாநிலம் திகழ்வதாகவும், இம்மாநில மக்களில் 99 சதவீதம் பேர் அசைவ உணவு சாப்பிடுபவர்கள் என்றும் ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடம், Registrar General of India நடத்திய ஆய்வில் ஏறக்குறைய ஆண்களும் ( 98.8), பெண்களும் (98.6) சரிவிகிதத்தில் அசைவ உணவு உண்பவர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.

தெலங்கானாவைத் தொடர்ந்து முறையே மேற்குவங்கம், ஆந்திரப்பிரதேசம், ஒடிசா மற்றும் கேரளா ஆகியவை அசைவ உணவு உண்பவர்கள் அதிகம்பேர் கொண்ட மாநிலங்களாக திகழ்கின்றன. அதேப்போன்று ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகியவை சைவ உணவு உண்பவர்கள் அதிகம் பேர் கொண்ட மாநிலங்களாக திகழ்கின்றன.

அதே சமயம் நாடு தழுவிய அளவில் பார்த்தால் அசைவ உணவு உண்பவர்களின் சராசரி விகிதம், 2004 ல் 75 சதவீதமாக இருந்தது 2014 ல் 71 சதவீதமாக குறைந்துள்ளது.

தெலங்கானாவில் மாமிச உணவு அதிகம் உட்கொள்வதற்கு அம்மாநில மக்களின் பாரம்பர்யமான உணவு பழக்கம்தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

தெலங்கானா மக்களில் ஏராளமானோர் ஆடு மற்றும் கோழி இறைச்சியை தங்களது காலை உணவில் கூட அதிகம் எடுத்துக்கொள்கின்றனர். மேலும் விலங்குகளின் கிட்னி, மூளை மற்றும் கால் போன்றவற்றையும் உண்கின்றனர். மேலும் ஆடு, கோழி தவிர முயல், ஈமுக்கோழி மற்றும் காடை ஆகிய இறைச்சிகளையும் எடுத்துக்கொள்வதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

மாறிவரும் வாழ்க்கை முறைதான் இம்மாநில மக்கள் அதிகம் அசைவ உணவு எடுத்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது என்றும், மதமும் இதில் குறிப்பிடத்தக்க பங்காற்றுகின்றது. அசைவ உணவு உண்பவர்களில் ஹைதராபாத்தில் அதிகம் பேர் உள்ளனர். சைவ உணவு உண்பவர்களில் இதற்கு ஈடான எண்ணிக்கை தெலங்கானாவின் இதர மாவட்டங்களில் இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.