Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 23, 2016

இந்த ஆயுர்வேத டூத் பேஸ்ட் சொத்தை பல், ஈறு நோய்கள் மற்றும் மஞ்சள் பற்களைப் போக்கும் என்பது தெரியுமா?


என்ன தான் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள், சொத்தைப் பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு போன்றவற்றிற்கு கடைகளில் ஏராளமான டூத் பேஸ்ட்கள் விற்கப்பட்டாலும், அவற்றால் உண்மையில் எந்த ஒரு பலனும் கிடைத்திருக்காது. ஆகவே பலரும் தங்கள் பல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண இயற்கை வழிகளை நாடுகின்றனர்.

தற்போது நிறைய பேர் தங்களின் உடலில் ஏற்படும் எந்த ஒரு பிரச்சனைகளுக்கும் இயற்கை வழிகளை தேடி வருகின்றனர். அப்படி நம் வாயில் ஏற்படும் பிரச்சனைகளைப் போக்க வேப்பிலை ஓர் சிறந்த பொருளாகும். மேலும் ஆயுர்வேதத்திலும் வாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு வேப்பிலை தான் பரிந்துரைக்கப்படுகிறது.

இங்கு ஓர் அற்புதமான நேச்சுரல் டூத் பேஸ்ட்டை வீட்டிலேயே எப்படி தயாரிப்பதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைக் கொண்டு தினமும் பற்களைத் துலக்கி வந்தால், வாயில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கலாம்.



டூத் பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் சோடா – 3 டேபிள் ஸ்பூன்
ஜிலிடால் – 1 டேபிள் ஸ்பூன்
வேப்பிலைப் பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்
புதினா எண்ணெய் – 15 துளிகள்

தயாரிக்கும் முறை:
* மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, பேஸ்ட் போல் வரும் வரை நன்கு கிளறி விட வேண்டும். பின் அதனை ஒரு சிறிய கண்ணாடி கிண்ணத்தில் போட்டு சேமித்து வைத்துக் கொள்ளவும்.

* இந்த டூத் பேஸ்ட்டைக் கொண்டு தினமும் மூன்று வேளை பற்களைத் துலக்கி வந்தால், பல் மற்றும் ஈறு பிரச்சனைகளில் இருந்து விரைவில் விடுபட முடியும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.