Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

விருந்தோம்பலில் தமிழர்கள் சிறந்தவர்கள் : துபாய் இப்தார் நிகழ்வில் வளைகுடா பிரமுகர்கள் பாராட்டு


தமிழர்களை நிர்வாகிகளாக செயல்படும் துபாய் ஈமான் கல்ச்சுரல் சென்டர் சமூக நல அமைப்பு துபாய் தேரா ப‌குதியில் உள்ள‌ குவைத் ப‌ள்ளி என்ற‌ழைக்க‌ப‌டும் லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் அருகில்  தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு இப்தார் ஏற்பாடு செய்யப்படுகிறது. இங்கு தமிழக சுவையுடன் கூடிய நோன்பு கஞ்சி தினமும் வழங்கப்படுகிறது. நிகழ்விடத்திற்கு வருகை தந்த  வளைகுடா பிரமுகர்கள்  ஆதில் சகி மஹ்ம்து அல் பலூஸி மற்றும் நபீல் கைத் ஆகியோர் ஈமான் பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ஒன்றாக அமர்ந்து நடைபெறும் இப்தார் நிகழ்வை வெகுவாக வரவேற்று பேசினர்.

அவர்கள் கூறியதாவது , தமிழகத்தை சேர்ந்தோர் நிர்வாகிகளாக இருந்து நடத்தும் ஈமான் கல்ச்சுரல் சென்டரின் இந்த சேவை பாராட்டுக்குறியது தமிழர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள். மேலும் இந்த  இப்தார் நிகழ்ச்சி நாடு, மொழிகளை கடந்து இதயங்களை ஒருங்கினைக்கிறது என்றனர்.

அவர்களோடு வருகை தந்த‌ துபாய் டி டி எஸ் நிர்வாகிகளில் ஒருவரான ஜெயந்தி மாலா சுரேஷும்  ஈமானின் சேவையை பாராட்டினார். முன்னாள் எம்பி அப்துல் ரஹ்மான் இநிகழ்ச்சி ஏற்பாடுகள் குறித்தும் ஈமான் செயல்பாடுகள் குறித்து விளக்ககினார். ஈமான் பொது செயலாளர் குத்தாலம் லியாக்கத் அலி, துணை பொது செயலாளர் தாஹா, செயலாளர்கள் அப்துல் ரசாக் ,ஹமீது யாசின், சாதிக் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.