Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

தமிழ் அகதிகளுக்கு வழிவிட்ட இந்தோனேசியா..! முடிவுக்கு வந்த போராட்டம்


தமிழகத்திலிருந்து கடல் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்து, கடந்த ஒரு வாரமாக இந்தோனேசியாவின் கடல் பகுதியில் தவித்து வந்த 44 தமிழ் அகதிகள் படகில் இருந்து தரையிறங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து கடந்த 11ம் தேதி 15 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 44 பேர் கடல் வழியாக படகில் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றனர். அவர்கள் சென்ற படகு கோளாறு ஏற்பட்டதால் இந்தோனேசியாவின் கடல் பகுதியில் தத்தளித்தனர். அவர்களுக்கு பாஸ்போர்ட், பயண ஆவணங்கள் எதும் இல்லாததால் தரையிறக்க இந்தோனேசிய அரசும், Aceh மாகாண அரசும் மறுத்து வந்ததோடு, படகு சரி செய்யப்பட்டதும்  அவர்கள் அனைவரும் சர்வதேச கடல் பகுதிக்கு அனுப்பப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.



இந்த நிலையில், நேற்று முன்தினம் படகில் இருந்த பெண்கள், "தங்களை காப்பாற்றுங்கள் அல்லது இங்கேயே சுட்டுக் கொன்று விடுங்கள்" என கதறிய காட்சி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில் Aceh மாகாண அரசு உதவ வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இதையடுத்து ஒரு வார போராட்டத்துக்கு பிறகு 44 பேரும் தரையிறங்க இந்தோனேசியா அரசு அனுமதி அளித்துள்ளது. இவர்கள் அனைவரும் Aceh மாகாண கடற்கரையோரம் தரை இறக்கப்பட்டுள்ளதாக அங்கு செயல்படும் கியூடன்யோ அமைப்பு உறுதி செய்துள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.