அரசு பணியில் உள்ள தொழிலாளர்களின் குரல் ஒலிக்க தொழிற்சங்கங்கள் உதவுகின்றன. ஆனால், பல்வேறு தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குரல் சத்தமில்லாமலேயே மறைந்துவிடுகின்றன. இந்நிலையில், ஐ.டி. தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கம் அமைக்க உரிமை உள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் பணி பாதுகாப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் போட்டி நிறைந்த இந்த காலத்தில், பணி பாதுகாப்பின்றியும் கிடைத்த வேலைக்கு செல்லும் நிலையே தற்போது அதிகம் உள்ளது.
அண்மையில் தனியார் ஐ.டி.நிறுவன ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோர் எந்தவித முன்னறிவிப்புமின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதிலிருந்து அந்த துறையில் உள்ளவர்களின் நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
இந்நிலையில் ஐடி நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்க சட்டம் 1947-ன் படி சங்கம் அமைக்க உரிமை கோரி தொடரப்பட்ட வழக்கில், தொழிற்சங்கம் அமைக்க சட்டமே உள்ளதாக தமிழக அரசு தற்போது பதில் அளித்துள்ளது.
ஐ.டி. நிறுவன ஊழியர்களும் தொழிற்சங்கம் அமைக்கலாம் என்ற தமிழக அரசின் விளக்கத்தின் மூலம், பணி பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு ஐ.டி. ஊழியர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக ஐ.டி. பணியாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.