' காவல் விசாரணைக்கு அழைத்துச் சென்று இஸ்லாமிய இளைஞரை சுட்டுக் கொன்ற எஸ்.ஐக்கு மீண்டும் பணி வழங்குவது நியாயமா?' எனக் கொந்தளிக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா. ' இதுதொடர்பாக அரசு விரைந்து மேல்முறையீடு செய்ய வேண்டும்' என்கிறார் அவர்.
ராமநாதபுரம், எஸ்.பி.பட்டிணத்தைச் சேர்ந்த செய்யது முஹம்மது என்ற இளைஞர், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக கடந்த 14-10-2014 அன்று காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு போலீஸ் எஸ்.ஐ காளிதாஸ் என்பவரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். ஒருகட்டத்தில், செய்யது முகமதுவைச் சுட்டுக் கொன்றுவிட்டார் எஸ்.ஐ. காளிதாஸ். இந்த சம்பவம் மனிதஉரிமை ஆர்வலர்களை கொந்தளிக்க வைத்தது. ' போலீஸ் எஸ்.ஐ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். செய்யதுவின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்' என்பதை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் போராட்டத்தில் குதித்தனர். தொடர்ந்து, ' செய்யது முகமது அப்பட்டமாக படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். எஸ்.ஐ மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும்' என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போராட்டத்தில் இறங்கியது. நிலைமை விபரீதமாவதை உணர்ந்த தமிழக அரசு, எஸ்.ஐ காளிதாஸை பணி இடைநீக்கம் செய்தது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி வசம் வழக்கை ஒப்படைத்தது.

இதுதொடர்பாக, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா பேசும்போது, "செய்யது முகமது படுகொலை வழக்கில், உச்ச நீதிமன்ற மோதல் சாவுகள் (என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் குற்றவியல் நடுவர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது. சி.பி.சி.ஐ.டி மற்றும் குற்றவியல் நடுவர் விசாரணை ஆகிய இரண்டும் முடிந்த நிலையில், எஸ்.ஐ காளிதாஸ் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302-ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் கடந்த 19.06.2015 அன்று கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்ற, மதுரை கிளையில் காளிதாஸ் தாக்கல் செய்த மனுவில், 'தனக்கு வழங்கப்பட்ட பணி இடைநீக்கத்திற்கு தடைவிதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர்கள் வலுவான ஆதாரங்களுடன் வலுவாக எதிர்ப்பு தெரிவிக்காததால், பணியிடை நீக்கத்திற்கு இடைக்கால தடை விதித்து அவருக்கு மீண்டும் பணி வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் அடிப்படையில் காளிதாஸ் மீண்டும் பணியில் சேர்ந்தால், அது தவறான முன்னுதாரணமாக ஆகி விடும். சட்டத்தை தமது கையில் எடுத்து, அத்து மீறி நடக்கும் காவல் அலுவலர்களுக்கு ஊக்கம் அளித்து விடும். எனவே, மீண்டும் காளிதாஸுக்கு பணி அளிக்க உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பிற்கு எதிராக, உடனே தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்கிறார் கொந்தளிப்போடு.
ராமநாதபுரத்தையே உலுக்கிய இஸ்லாமிய இளைஞர் படுகொலையில், தமிழக அரசின் மேல்முறையீட்டுக்காகக் காத்திருக்கிறார்கள் மனிதஉரிமை ஆர்வலர்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.