புகழ் பெறுவதற்கான ஆசையால் பேசுவதெல்லாம் நாட்டுக்கு நன்மை விளையப்போவதில்லை என சுப்பிரமணியன் சாமிக்கு பிரதமர் மோடி மறைமுகமாகப் பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், ''எனது கட்சியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இதுபோன்ற கருத்து தேவையற்றது. புகழ் பெறுவதற்கான ஆசையால் பேசுவதெல்லாம் நாட்டுக்கு நன்மை விளைவிக்காது. தனது கட்சியை விட, தன்னை உயர்ந்தவராக ஒருவர் கருதுவதும் தவறு. கட்சித் தலைவர்கள் பேச்சில் கவனமும், கட்டுப்பாடும் தேவை என நான் ஏற்கெனவே அனைவரையும் அறிவுறுத்தியுள்ளேன்.
ரகுராம் ரஜனுடனான எனது அனுபவம் நன்றாக இருந்தது. அவர் செய்த பணியைப் பாராட்டுகிறேன். அவருடைய தேசப்பற்றை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல், அவர் இந்தியாவின் நலனுக்காகப் பணியாற்றவில்லை என்று கூறுவதும் தவறு. அவர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்தியாவுக்காகச் சேவையாற்ற வேண்டும்'' என்றார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.