இந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்துக்கு அரசு ஆதரவு தெரிவித்து இருப்பதால், தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சுப்ரமணியன் சுவாமி, பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்திற்கு எதிராக குரல் எழுப்பினார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் சுவாமி, ''இந்தியாவின் அறிவுசார் சொத்துக்கள் குறித்த ஆராய்ச்சியை எதிர்த்தவர் மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன். இந்தியாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் கருத்து கூறி வந்தவர். இது பற்றிய சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்" என கூறி இருந்தார்.

ஆனால் செய்தியாளர்களிடம் அருண் ஜெட்லி கூறும்போது, ''தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்த் சுப்ரமணியன் குறித்த சுப்ரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்த கருத்து. அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது ஏற்றுகொள்ள முடியாது" என்று கூறினார்.
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தனது கருத்தை பின்வாங்கி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''இந்திய நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டவருக்கு அரசு ஆதரவு தெரிவிக்கிறது. மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு அரவிந்த் சுப்ரமணியத்தை பற்றி தெரியும் என்கிறது, ஆனாலும் அவர் அரசுப்பதவியில் உள்ளார். இதனால் நான் எனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் உண்மை விரைவில் தெரியவரும். அதுவரை நான் காத்திருப்பேன்" என தெரிவித்து உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.