Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

ஃபுட்போர்டு அடித்தால் பஸ் பாஸ் ரத்து... கல்வித்துறை அதிரடி உத்தரவு!


பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்தால், இலவச பயண அட்டையை ரத்து செய்ய நடவடிக்கை எடுங்கள் என்று அனைத்து பள்ளிகளுக்கும் கல்வித்துறை அதிரடி உத்தரவிட்டு உள்ளது.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பள்ளி செல்வதற்கு மாநகர அரசு பஸ்களையே நம்பி உள்ளனர். சென்னை மாநகர பஸ்களில் படிக்கட்டில் தொங்கியபடி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. மாணவர்களுக்காக அரசு, இலவசமாக பஸ் பாஸ் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.



பள்ளிக்கு செல்லும் போதும், பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பும் போதும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்படுகிறது. இதனால் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து மாணவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

முதுகில் புத்தகப்பையை தொங்க விட்டுக்கொண்டே பஸ் படிக்கட்டுகளில் மாணவர்கள் பயணம் செய்யும்போது, சாலையில் செல்பவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். நடந்துசெல்பவர்கள், சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் மீது மாணவர்கள் மோதி விடுகின்றனர். இது போன்ற நேரங்களில் சாலையில் செல்பவர்களும் கீழே தவறி விழுந்து விபத்து ஏற்படுகிறது.



மேலும், பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள் மட்டுமல்லாமல் போலீசாரும் சாலைகளில் நின்று கொண்டு மாணவர்களை எச்சரித்து, பஸ்சுக்குள் செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மாணவர்களின் படிக்கட்டு பயணம் மட்டும் தொடர்கதையாகதான் உள்ளது.

இந்நிலையில், பள்ளி மாணவர்களின் படிக்கட்டு பயணத்தை தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அதில், ''படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களை கண்டறிந்து அவர்களை அழைத்து பள்ளி நிர்வாகத்தினர் எச்சரிக்கை செய்ய வேண்டும்.

மேலும், இதனை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களின் பயண அட்டையை ரத்து செய்ய அடுத்த கட்டமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.