ஜூலை, 11ம் தேதி முதல், 13.80 லட்சம் ரயில்வே ஊழியர்கள், காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து, தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன் பொதுச் செயலர் கண்ணையா, சென்னை யில் நேற்று கூறியதாவது:அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது; புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது; தனியார் மயம் கூடாது என்பது உள்ளிட்ட, 36 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தோம். ஆனால் மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. இதனால், திட்டமிட்டப்படி, ஜூலை, 11 முதல், 13.80 லட்சம் அகில இந்திய ரயில்வே தொழிலாளர் சம்மேளன ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர். நாளை, வேலைநிறுத்த, 'நோட்டீஸ்' வழங்குவோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஓடுவதில் சிக்கல்:இதுகுறித்து, தட்சிண ரயில்வே ஊழியர் சங்க செயல் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:வேலை நிறுத்தத்தில் அங்கீகரிக்கப்படாத, 110 சங்கங்களும் பங்கேற்கின்றன. ரயில் ஓட்டுனர்களும் போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இதனால், 12 ஆயிரம்
பயணிகள் ரயில்கள்; 7,000 சரக்கு ரயில்கள் சேவையில் பாதிப்பு ஏற்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.