தமிழகத்தில், கூலிப்படை கலாசாரம் பெருகியுள்ளது என, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், குற்றப் பின்னணி உடைய, தி.மு.க., நிர்வாகிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில், 114 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலை, விரைவில் அ.தி.மு.க., தலைமை வெளியிடும் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'சட்டம் ஒழுங்கிற்கும், பொது அமைதிக்கும் சவாலாக மாறி வரும் கூலிப்படை கலாசாரத்திற்கு முடிவு கட்டி, பொது மக்களின் அச்சத்தை போக்க, அ.தி.மு.க.,அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை யில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், தி.மு.க., ஆட்சியில் நடந்த கொலை குற்றங்கள் பற்றியும், குற்றப் பின்னணி உடைய தி.மு.க., பிரமுகர்கள் பற்றியும், தகவல்கள் திரட்ட, அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,மாவட்ட வாரியாக, தகவல்கள் எடுக்கப்பட்டு உள்ளன.கொலை குற்றவாளிகள், நில அபகரிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், கட்ட பஞ்சாயத்து, ரவுடியிசம், கள்ளச்சாராயம்
போன்ற பல்வேறு குற்றப் பின்னணி உடைய தி.மு.க., பிரமுகர்களின் பட்டியல் தயாரிக்கப் பட்டதில், மதுரையில் மட்டும், 25 பேர் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.இந்த விவரங்கள், விரைவில் அ.தி.மு.க., தலைமையில் இருந்து வெளியாகலாம் என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.