பீகார் கல்வி மந்திரி அசோக் சவுத்ரி, மத்திய மனிதவளத்துறை அமைச்சர் ஸ்ம்ரிதி இரானியை ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் ‘டியர்’ என அழைத்து ‘கல்வி கொள்கை என்னாயிற்று?’ என கேள்வி எழுப்ப, ஸ்ம்ரிதி இரானி அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். ‘ பெண்களை டியர் என அழைத்து தொடங்குவது சரியல்ல’ என்று ஸ்ம்ரிதி கூற , அசோக் சவுத்ரியோ, பணி ரீதியிலான தகவல் தொடர்புகளை' டியர் ' என தொடங்கலாம்’ என பதிலளித்தார், இந்த விஷயத்தில் இருவருமே விட்டுக் கொடுக்காமல் ஒருவரை ஒருவர் கடுமையாக சாடி வருகின்றனர்.
இந்த நிலையில், ஸ்ம்ரிதி இரானி தனது முகநுாலில் பெண்களுக்கு ஆதரவாகவும், தனது சாதனைகளை பட்டியலிட்டும் ஒரு கடித பாணியிலான பதிவை வெளியிட்டுள்ளார். அதில், 'பையன்களால் கேலி, கிண்டல்களுக்கு ஆளாகிறபோது, அவர்கள் எதைச் சொன்னாலும், பெண் பிள்ளைகள் பதில் அளிப்பதை தவிர்த்து விட வேண்டும்' என்று கூறியே வீடுகளில் வளர்க்கின்றனர். பெண்களை அவமானப்படுத்தும்போது, அவர்களை எதிர்த்து ஏன் கேள்வி கேட்கக் கூடாது?... தினசரி வாழ்வில் பெண் பிள்ளைகளும், வேலைக்கு செல்கிற பெண்களும் கஷ்டங்கள் பட்டாலும் அவர்களை 'வாயை மூடு' என்ற ஒற்றை வார்த்தையால் குடும்பங்களில் அடக்கி விடுகின்றனர்.
இதனாலேயே பெண்கள் வாயை முடிக் கொண்டிருக்க வேண்டியதிருக்கிறது. இது சரியான அணுகுமுறை அல்ல. 'ரோட்டில் யாராவது ஆண்கள் கிண்டலடித்தாலோ அல்லது அவமானப்படுத்தினாலோ அவர்கள் முகத்தில் ஒரு குத்து விடு' என்று கூறி சிறுவயது முதல் பெண்களை வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்காமல் 'அவர்களிடம் எதுவும் பேச்சு வைத்துக் கொள்ளாதே. பேசாமல் வீட்டுக்கு வந்து விடு' என்று கூறியே வளர்க்கின்றனர். நாங்கள் ஏன் வாயை முடிக் கொண்டிருக்க வேண்டும்?” என காட்டமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், தன்னை திறமையற்றவர் என்பதை குறிக்கும் வகையில், ‘ஆன்ட்டி நேஷனல்’ என குறிப்பிட்ட , அசோக் சவுத்ரிக்கு பதிலடியாக, ஸ்ம்ரிதி இரானி தனது சாதனைகளை பட்டியலிட்டுள்ளார்.
ஒரே ஆண்டில் 4 லட்சத்து 17 ஆயிரம் பள்ளிகளில் கழிவறை ஏற்படுத்தியிருக்கிறேன்- என்.சி.ஈ.ஆர்.டி புத்தகங்களை ஆன்லைனில் படிக்கும் வசதியை ஏற்படுத்தியிருக்கிறேன். இது நாட்டிலேயே முதன்முறையாகும்.
இ- பாடசாலை - கேந்திர வித்யாலயாவில் மாணவர்கள் வருகை, கல்வி நிலை குறித்து பெற்றோருக்கு எஸ்எம்எஸ் அலெர்ட் வசதி ஏற்படுத்தியிருக்கிறேன்
- இப்படி ஏராளமான தனது சாதனைகளை குறிப்பிட்டுள்ள ஸ்ம்ரிதி இரானி, முத்தாய்ப்பாக கடிதத்தின் முடிவில் 'ஆன்டி நேஷனல்' என்றே கையொப்பமிட்டு தனது பதிவை வெளியிட்டுள்ளார். ஸ்ம்ரிதி இரானியின் இந்த பதிவு ஆயிரக்கணக்கான லைக்குகளை பெற்றுள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.