கேரள மாநிலம், திருவனந்தபுரத்தைச் சேர்ந்த நிஹல் ராஜ், 'Nihal Raj aka Kicha’s YouTube channel' வீடியோவில் சமையலில் அசத்துகிறார்.
அம்மாவிற்கு பையன் உதவுவதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா... நிஹல் ராஜ்க்கு வயது ஆறு.
ஆரம்பத்தில் அம்மா சமைக்கும்போது உடன் இருந்து கவனித்துக் கொண்டிருந்த நிஹல் ராஜிற்கு, கொஞ்ச நாளிலேயே சமையல் மீது ஆர்வம் ஏற்பட்டது. தானும் அதேபோல செய்து பார்க்க ஆரம்பித்தான். அதை ஒருநாள் தற்செயலாக பார்த்த நிஹலின் தந்தை ராஜகோபால், தன்னுடைய மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்தார்
2015 ஜனவரி மாதம் முதன் முதலாக இந்த வீடியோவை யூ-டியூப்பில் அப்லோடு செய்தார். இந்த வீடியோவிற்கு ஆரம்பத்தில் நெட்டிசன்களிடமிருந்து பெரிய அளவில் வரவேற்புக் கிடைக்கவில்லை. ஆனாலும் சளைக்காமல் நிஹலின் தந்தை, அடுத்தடுத்து சிறுவனின் வீடியோக்களை அப்லோட் செய்யவே, அவை வைரலாகத் தொடங்கின.

அதனைத்தொடர்ந்து ஒரு தனியார் வலைதள நிறுவனம், தங்களது பிரத்யேக முகநூல் பக்கத்தில் அதைப் பகிர அனுமதி அளித்தது. தற்போது தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த வீடியோவைக் கண்டு களிப்பதோடு, மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்கிறார்கள்.
தான் சமைத்த உணவை தானே ருசித்து சாப்பிட்டபடி அவன் சொல்லும், ''வாவ்', 'ஆவ்ஸம்', 'லவ் யூ' போன்ற வார்த்தைகளையும், அவன் பாடும் பாடல்களையும் பார்க்க பெரும் ரசிகர் கூட்டம் இருக்கிறது சமூக வலைதளங்களில். சிறுவனின் இந்த அசத்தல் வீடியோ அவ்வளவு அழகாக இருக்கிறது. மிக்கி மவுஸ் ஐஸ்கிரீம், ஆரஞ்ச் மில்க்ஷேக் என விதவிதமாக அவன் சமைத்துக்காட்டும் உணவு வகைகள், 'நேரில் வந்து செய்து தரமாட்டானா...' என்ற ஏக்கத்தை ஏற்படுத்துகிறது.
எத்தனை அம்மாக்களுக்கு இந்த பாக்கியம் கிடைக்கும் நம்மூரில்...?
அந்த வீடியோக்களை நீங்களும் பாருங்களேன்..

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.