சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பலரும் தங்களின் சொந்த மண்ணான தமிழகத்தில் காணி நிலமாவது இருக்க வேண்டுமென சென்டிமென்ட்டாக நினைக்கின்றனர். அதற்காக அவர்கள் செய்யும் முதலீடு, எதிர்காலத்தில் நல்ல பலன் தரும் விதமாகவும் இருக்க வேண்டுமென்பதற்காக சென்னையில் நிலம், வீடு வாங்குவதை விரும்புகிறார்கள். அப்படி, சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்கள் 33 பேர், அந்நாட்டை சேர்ந்த கேஎம்ஜிஎம் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் கடந்த 2008 முதல் 2011ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் சென்னையில் 45 மனைகளை வாங்கியுள்ளனர். அவரவர் வசதிக்கு ஏற்றவாறு குறிப்பிட்ட சதுர அடியில் நிலம் வாங்கினர். அந்த நிலத்தை விற்ற நிறுவனம், இன்னும் ஓரிரு ஆண்டில் நிலத்தின் மதிப்பு 2, 3 மடங்கு எகிறி விடும் என கூறிய ஆசை வார்த்தையை அப்படியே நம்பியுள்ளனர்.
ஆனால் வாங்கிய பிறகு தான் தெரிந்திருக்கிறது. அந்த நிலங்கள், வளர்ச்சியே அடையாத பகுதியில் இருப்பவை என்று. அந்த நிலங்களின் மதிப்பு எந்த காலத்திலும் அதிகமாகாது என கூறி இப்போது புலம்புகின்றனர். இதற்காக அவர்கள் செலவிட்டிருப்பது கிட்டத்தட்ட ரூ.4 கோடி. சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு சென்று, நிலத்தை திருப்பி வாங்கிக் கொண்டு பணத்தை தருமாறு ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அவர்களை சந்திக்காமல் போனில் மட்டும்பேசிய நிறுவன இயக்குனர், பின்னர் தனது வக்கீலை அணுகும்படி கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
இப்போது, வக்கீலிடம் சென்றால், ‘நிலத்தை மறுமதிப்பீடு செய்கிறோம். தேவையில்லாமல் நிறுவனத்துக்கு சென்று தகராறு செய்தால் போலீஸ் புகாருக்கு ஆளாக வேண்டியிருக்கும்’ என கூறுகிறாராம். சிங்கப்பூர் நிறுவனம் என்பதால் ஏமாற்றமாட்டார்கள் என நம்பி மோசம் போய் விட்டதாக 33 பேரும் புலம்புகிறார்கள்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.