சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் முருகேசன் (45). இவரது மகள் காளீஸ்வரி (5). கடந்த ஜனவரி மாதம் முருகேசன் தனது மகள் காளீஸ்வரியுடன் (வயது 5), ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு வேலை தேடி வந்துள்ளனர். அப்போது தன்னுடைய மனைவி மகேஸ்வரி கடந்த டிசம்பர் மாதம் கடலூரில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்துவிட்டதாகவும் பிழைப்பு தேடி இங்கு வந்துள்ளதாகவும் கூறி சென்னிமலை அடுத்துள்ள தட்டான்காட்டுபுதூர் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில், கடந்த 13ம் தேதி அப்புக்குட்டியிடம் ரூ.1000 கடன் கேட்டார். இதற்கு அவர் மறுத்தார் அப்பொது 'தன்னுடைய மகள் காளீஸ்வரியை உங்கள் வீட்டில் விட்டுச் செல்கிறேன். 2 நாளில் ரூ.1000ஐ கொடுத்துவிட்டு மகளை அழைத்துக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார். இதையடுத்து, அப்புக்குட்டி ரூ.1000 கொடுத்துள்ளார். இதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த அப்புக்குட்டி சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்பு ஆலோசனை மையம் மற்றும் சென்னிமலை போலீசார் தட்டாங்காட்டுபுதூருக்கு நேற்று முன்தினம் சென்று அப்புக்குட்டியிடம் இருந்த காளீஸ்வரியை மீட்டு வந்து ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.