அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை, உலக பணக்காரர்களை தர வரிசைப்படுத்தி பட்டியலிடுவது வழக்கம். இதுபோன்று புதிய கண்டுபிடிப்புகள் மூலம் சாதனைப் படைத்து முன்னேறி செல்வந்தராக, தொழில் அதிபராக உயர்ந்துள்ள பெண்களையும் அது பட்டியலிட்டுள்ளது. இப்பட்டியலில் 60 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், அமெரிக்காவின் முதல் பணக்காரர் என்ற பெருமையை ஏபிசி சப்ளை என்ற நிறுவனத்தின் உரிமையாளர் டயானா ஹென்டிரிக்ஸ் பெற்றுள்ளார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.32,830 கோடி. கடந்த ஆண்டு இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்.
இந்தியாவில் பிறந்த நீரஜா சேத்தி மற்றும் ஜெய உல்லால் ஆகிய இருவரும் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். நீரஜா சேத்தி அவரது கணவர் பாரதி தேசாயுடன் இணைந்து சின்டெல் என்ற தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தை தொடங்கினார். ஐடி ஆலோசனை மற்றும் அவுட் சோர்சிங் எனப்படும் அயல்பணி ஒப்படைப்பு போன்ற பணிகளில் இது ஈடுபட்டு வந்தது. 61 வயதான நீரஜா சேத்தியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.7,370 கோடி. இவருக்கு 16வது இடம் கிடைத்துள்ளது. இவரது நிறுவனத்தில் சுமார் 25,000 பேர் பணியாற்றி வருகின்றனர்.
போர்ப்ஸ் பட்டியலில் 30வது இடம் பெற்றுள்ள மற்றொரு இந்திய வம்சாவளி பெண்ணான ஜெய உல்லால் லண்டனில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். இவர் அரிஸ்டா நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆவார். இவரது நிகர சொத்து மதிப்பு 47 கோடி டாலராகும். இவர் கடந்த 2008ல் இதன் தலைமை பொறுப்பை ஏற்கும் போது அதற்கு வருமானம் எதுவும் இல்லை. 50க்கும் குறைவான ஊழியர்களே இருந்தனர். தற்போது, நிறுவனத்தின் வருமானம் 83.8 கோடி டாலராக உயர்ந்துள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.