Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 8, 2016

5 வயதில் வீட்டை விட்டு ஓடியவர் 36 வயதில் பெற்றோரை தேடுகிறார்


சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த வாலிபர் ஒருவர், ஐந்து வயதில் பெங்களூரு சென்றவர், 31 ஆண்டுகளுக்கு பின், தன் பெற்றோர், சகோதரிகளை தேடி வருகிறார்.
சேலம், அம்மாபேட்டையை சேர்ந்தவர் மோகன், 36. இவரது தந்தை வரதராஜ், தாய் லட்சுமி ஆகியோர், நெசவுத் தொழில் செய்து வந்துள்ளனர். ஐந்து வயதில், பள்ளிக்கு சென்றபோது, புத்தக பை, சிலேட் தொலைந்ததால், சேலம் ஜங்ஷனில் இருந்து, பெங்களூருக்கு சென்றார். தற்போது, பெற்றோரை தேடி அம்மாபேட்டை, சேலம், ஆத்துார் பகுதிகளில் விசாரித்து வருகிறார்.
இது குறித்து, மோகன் கூறியதாவது:
சேலம், அம்மாபேட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்தேன். பள்ளி சென்ற, 10 நாட்களில், புத்தக பை, சிலேட் தொலைந்து போனதால், சேலம் ஜங்ஷனில் பெங்களூரு ரயில் ஏறிச் சென்றேன்.
டிக்கெட் இல்லாமல் சென்றதால், ரயில்வே போலீசார் பெங்களூரு அருகேயுள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அங்கு, 8ம் வகுப்பு வரை படித்தேன். 10 ஆண்டுகளுக்கு பின், ஒரு வீட்டில் வேலை செய்தபோது, கொடுமை செய்ததால், அங்கிருந்து ஓடிவிட்டேன்.
தற்போது, ஜெகதீஸ் என்பவரது ஓட்டலில், சப்ளையராக வேலை செய்து வருகிறேன். 2014ல், பெற்றோரை கண்டு பிடிப்பதற்காக, அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தேன். லோக்சபா தேர்தல் நடந்ததால், தேர்தல் முடிந்து வரும்படி கூறினர்.
எப்படியாவது பெற்றோரை கண்டுபிடிக்க வேண்டும் என, பெங்களூரில் வேலை செய்யும், சேலம் மாவட்ட நண்பர்கள் உதவியுடன், பெற்றோரை தேடி வருகிறேன். பெற்றோர் மற்றும் சகோதரியை கண்டுபிடித்து, அதன்பின் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.