Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 27, 2016

சிறு வயதிலேயே குழந்தைகள் உப்பு நிறைந்த உணவுகள் உண்பதால் ஏற்படும் பாதிப்புகள்


உப்பு நிறைந்த உணவுகள் எப்படி உங்கள் குழந்தையைப் பாதிக்கிறது என்று தெரியுமா?

இன்றைய குழந்தைகள் பாப்கார்ன், நொறுக்குத்தீனிகள், சிப்ஸ் போன்ற பல உப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை உண்ணுகிறார்கள். இவை பொதுவாக பெற்றோர்களுக்கு சாதாரணமாக தோன்றினாலும் அவர்கள் வளர வளர இது போன்ற உணவுகளுக்கு அடிமையாகி இது ஒரு பிரச்சனையாக மாற வாய்ப்புள்ளது.

உப்பின் மூலம் விளையும் பாதிப்புகள் உடல் பருமன் மற்றும் இரத்த அழுத்தம் ஆகியவற்றையும் தாண்டி பல உடல் நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும். அதனால் தான் பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இளம் பருவத்தில் உப்பைக் குறைத்து அல்லது உப்பற்ற உணவுகளை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

உங்கள் குழந்தைகள் ஒரு நாளைக்கு எவ்வளவு உப்பை சாப்பிடலாம் என்று உங்களுக்குத் தெரியுமா? ஒரு நாளைக்கு சராசரியாக 1000 முதல் 1500 மில்லி கிராம் வரை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைய குழந்தைகள் இதைப் போன்று இருமடங்கு உப்பை உண்கிறார்கள் என்பது தான் உண்மை.

குழந்தைகள் உப்பு நிறைந்த சிப்ஸ் போன்ற உணவுகளுக்கு அடிமையாகும் வாய்ப்புள்ளது. இது கடைசி வரை தொடரும் ஒரு ஆபத்தான பழக்கமாகவும் மாறலாம்.

குழந்தைகள் தொடர்ச்சியாக இது போன்று பெரிய வயது வரை உப்பிட்ட பண்டங்களை எடுத்துக் கொண்டால் வாதம், சிறுநீரகக் கோளாறுகள், இதயக்கோளாறுகள் மற்றும் அதிக ரத்த அழுத்தம் ஆகியவை பிற்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகளவு உள்ளது.

பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக அளவிலான சோடியத்தை (உப்பை) கொண்டிருப்பதால் உங்கள் குழந்தைகளை இதுப்போன்ற உணவுகளிலிருந்து தள்ளியிருக்கச் செய்வது மிகவும் அவசியம். இளம் பருவத்தில் அவர்களுக்கு காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு ஊட்டுவதன் மூலம் அவர்கள் உணவுகளுக்காக ஏங்குவதைத் தவிர்த்து ஆரோக்கியமாக வளர்வதை உறுதி செய்ய முடியும்.

உங்கள் குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டுமெனில், சிறுவயதில் இருந்தே உணவில் சேர்க்கும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள். இதனால் வளர வளர அவர்களுக்கு உப்பு அதிகம் நிறைந்த உணவுகளின் மீது நாட்டம் ஏற்படுவதைத் தடுக்கலாம். மேலும் குழந்தைகளுக்கு உப்பினால் ஏற்படும் அபாயங்களையும் சொல்லிக் கொடுத்து வளர்த்தால், அவர்கள் உப்பு நிறைந்த உணவுகள் உட்கொள்வதைத் தடுக்கலாம்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.