பீகாரில் பிளஸ் 2 தேர்வில் மோசடி செய்து முதல் இடம் பிடித்த மாணவி மறுகூட்டலுக்கு பிறகு தேர்ச்சி பெறாததை அடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகாரில் மாநில பள்ளி தேர்வு வாரியம் நடத்திய தேர்வில் மாநிலம் அளவில் முதலிடம் பிடித்த சாதனை மாணவர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். இதில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவி ரூபி ராயிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுத்தனர். அப்போது செய்தியாளர்கள் பொலிட்டிகள் சையின்ஸ் என்றால் என்ன? என்று கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த மாணவி பொலிடிகல் சயின்ஸ் என்பது சமையல் பற்றி படிப்பது என அவர் பதில் அளித்தார்.
இது பெரிதும் சர்சசைக்குள்ளானதை தொடர்ந்து இதுதொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய முதல்-மந்திரி நிதிஷ் குமார் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். மறு தேர்வில் பங்கேற்க 2 முறை சம்மன் அனுப்பியும் ரூபி ராய் ஆஜராகவில்லை. இதையடுத்து அவரது தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வல்லூநர் குழு பரிந்துரைத்தது.
இந்நிலையில் பாட்னாவில் கல்வித்துறையின் சிறப்பு குழு முன் மறுத் தேர்வுக்கு ரூபிராய் ஆஜர் ஆனார். அப்போது அவரிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர் அப்போது அவர் ஒன்றும் தெரியாமல் திருதிருவென்று விழித்தார். ஒரு கேள்விக்கு கூட அவர் சரியாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.
ரூபி ராய் உள்பட, முறைகேட்டில் ஈடுபட்ட நான்கு மாணவர்களுக்கு எதிராக, பாட்னா சிவில் நீதிமன்றம் ஜாமினில் வெளிவர முடியாத கைது வாரன்ட் பிறப்பித்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த வழக்கில் வைசாலி மாவட்டத்தில் உள்ள வி.ஆர் கல்லூரி முதல்வர் பச்சா ராய் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு, பாட்னா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பீகார் மாநில தேர்வு வாரிய முன்னாள் தலைவர் லால்கேஷ்வர் பிரசாத், அவரின் மனைவி மற்றும் ஐக்கிய ஜனதா தள முன்னாள் எம்எல்ஏ உஷா சின்ஹா உள்பட 20 பேரை சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் கைது செய்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.