Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 24, 2016

ஆர்.எஸ்.எஸ்.க்கும் டி காப்ரியோவுக்கும் என்ன தொடர்பு?


லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், ஆஸ்கர் விருதை வென்ற நடிகர் டி காப்ரியோவை சந்திக்கவுள்ளார்.

பிரிட்டனில் இயங்கி வரும்,  இந்து ஸவயம் சேவக் சங்கம், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பவக்தை லண்டனில் நடக்கவுள்ள நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வருகிற ஜூலை மாதம் 30 மற்றும் 31 ம் தேதிகளில் மோகன் பகவத் லண்டன் செல்கிறார். மோகன் பகவத்தின் லண்டன் பயணத்தின் போது, அவரை இரு உலக பிரபலங்கள் சந்திக்கவுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.



ஒருவர் ஆஸ்கர் விருதை வென்ற டி காப்ரியோ, இன்னொருவர் இங்கிலாந்து தொழிலதிபர் பிரான்சன். இந்த இருவருமே சுத்த சைவம். அந்த வகையில் மாடுகளை கொல்வதற்கும் மாட்டிறைச்சி விற்பதற்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஆர்எஸ்எஸ் அமைப்பு மீது இவர்களுக்கு ஒரு ஈர்ப்பு உண்டு.

அந்த வகையில்தான் டி காப்ரியோ, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகத்தை சந்திக்கவுள்ளதாகத் தெரிகிறது. நடிகர் டி காப்ரியோவும் சில ஆண்டுகளாக உயிர்களை வதைப்பதற்கும், அசைவம் சாப்பிடுவதற்கும் எதிராக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.