Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016

19 வயது இளம் வீரரிடம் தோற்றார் அனுபவ வீரர் ரோஜர் ஃபெடரர்!


உலகின் முன்னணி டென்னிஸ் வீரர்களில் ஒருவரான ரோஜர் ஃபெடரர் 19 வயது இளம் வீரரிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். ஜெர்மனியின் ஹேல்ஸ் நகரில் நடைபெறும் டென்னிஸ் தொடரில் அரையிறுதி போட்டியில் அந்நாட்டு இளம் வீரர் அலெக்சாண்டர் சுவரேவை ஃபெடரர் சந்தித்தார்.

சுவரேவின் துடிப்பான ஆட்டத்தின் முன் ஃபெடரரின் அனுபவம் எடுபடவில்லை. ஆட்ட முடிவில் 7-6, 5-7, 6-3 என்ற செட் கணக்கில் சு‌வரேவ் வெற்றிபெற்றார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ள நிலையில் கிடைத்துள்ள இந்த தோல்வி ஃபெடரருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.