Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 17, 2016

வீடியோ: கர்நாடக மாநிலத்தில் காட்டுமிராண்டித்தனம் - மழைக்காக சிறுவனை நிர்வாணப்படுத்தி பூஜை


கர்நாடக மாநிலத்தில் மழை வேண்டி கிராம மக்களுடன் சேர்ந்து ஒரு சிறுவன் நிர்வாணமாக ஊர்வலம் சென்று சிறப்பு பூஜை செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் மழை வேண்டி கிராம மக்களுடன் சேர்ந்து ஒரு சிறுவன் நிர்வாணமாக ஊர்வலம் சென்று சிறப்பு பூஜை செய்துள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள பந்தரஹள்ளி கிராமத்தில் கடந்த ஜூன் 10-ம் தேதி இந்த நிர்வாண பூஜை நடந்ததாக தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் வறட்சி ஏற்படும் மாவட்டங்களில் ஆண்டுதோறும் இதைப்போன்ற நிர்வாண பூஜைகள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பலதரப்பினரும் குரல் எழுப்பி வந்தாலும், இதுதொடர்பாக மாநில அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என கூறப்படுகிறது.

சித்ரதுர்கா மாவட்டம், பந்தரஹள்ளி கிராமத்தில் நடந்த இந்த காட்டுமிராண்டித்தனம் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சி வீடியோவாக பரவி வருகிறது. அந்த வீடியோ, உங்கள் பார்வைக்கும்..,



No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.