கடந்த ஓராண்டில் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பந்தயத்தில் கால்பந்து ஜாம்பவான்களான ரொனால்டோவும், மெஸ்ஸியும், முந்தி நிற்கின்றனர்.
விளையாட்டு என்பது வெறும் விளையாட்டல்ல.திறமையை நிரூபிக்கும் பட்சத்தில் போட்டிகள், விளம்பரங்கள் என பல்வேறு தளங்களில் வீரர்களுக்கு கோடிகளை ஈட்டித்தரும். அந்த வகையில் சர்வதேச அளவில் விளையாட்டு மூலம் அதிகம் சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் ஆசிரியர் வெளியிட்டார்.
இதில் போர்ச்சுகலை சேர்ந்த கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனல்டோ முதலிடம் பிடித்துள்ளார். ஸ்பெயினின் ரியல் மேட்ரிட் அணிக்காக விளையாடி வரும் இந்தாண்டு இதுவரை சுமார் 572 கோடி ரூபாய் பணத்தை ஈட்டியுள்ளார்.
கால்பந்து சாதனைகளில் ரொனால்டோவுக்கு போட்டியாக இருக்கும் அர்ஜென்டினா கால்பந்து நாயகன் மெஸ்ஸி, இந்தப்பட்டியலிலும் அவரை நெருங்கி இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவரது வருவாய் இந்த ஆண்டு இதுவரை 527 கோடியாக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் லெப்ரன் ஜேம்ஸ், 501 கோடி ரூபாய் வருவாயுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த சில வாரங்களாக காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தாலும் சுவிட்சர்லாந்தை சேர்ந்த டென்னிஸ் நாயகன் இந்தப்பட்டியலில் ரோஜர் ஃபெடரர் நான்காவது இடத்தில் இருக்கிறார்.
அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரர் கெவின் துரண்ட் சுமார் 362 கோடி ரூபாயுடன் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். செர்பியாவை சேர்ந்த டென்னிஸ் நாயகன் நோவாக் ஜோக்கோவிச் 358 கோடி ரூபாயுடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார்.
இந்தப்பட்டியலில் ஆச்சரியமளிக்கும் வகையில் அமெரிக்காவை சேர்ந்த ரக்பி வீரர் கேம் நியுட்டன் 344 கோடி ரூபாய் வருவாயுடன் ஏழாவது இடத்தில் உள்ளார். அமெரிக்காவை சேர்ந்த கால்ப் வீரர்களான பில் மிக்கெல்சன், ஜோர்டான் ஸ்பைத் ஆகியோர் எட்டாவது மற்றும் ஒன்பதாவது இடங்களில் உள்ளனர். அமெரிக்காவை சேர்ந்த கூடைப்பந்தாட்ட வீரரான கோஃப் பிரையண்ட் இந்தப்பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார்.
அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டுத்துறையினர் பட்டியலில் வீராங்கனை ஒருவர் கூட இடம்பெறவில்லை. மேலும் கடந்த முறை இந்தப்பட்டியலில் முன்னிலையில் இருந்த கோல்ப் வீரர் டைகர் வுட்ஸ், குத்துச்சண்டை வீரர்களான ஃபிளாய்ட் மேவெதர், மேனி பேகியோ ஆகியோர் முதல் 10 இடங்களுக்குள் இடம்பெறவில்லை. அமெரிக்காவை சேர்ந்த வீரர்கள் 6 பேர் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.