Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 20, 2016


ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கமான ஒன்று. ஆனால் ராஜஸ்தானில் உள்ள பல கிராமங்களைச் சேர்ந்த இந்துக்கள் ரமலான் நோன்பு கடைபிடித்து வருகின்றனர்.

ஜெய்சல்மர், பர்மர் போன்ற மாவட்டங்களில் உள்ள பல கிராமங்கள் இந்து - முஸ்லீம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்கி வருகின்றன. இந்த கிராமங்களில் முஸ்லீம்கள் தீபாவளி கொண்டாடுவதும், பஜனை பாடல்கள் பாடுவதுடன் அன்றாடம் விநாயகர் வழிபாடு மேற்கொள்வதும் காலம் காலமாக நடந்து வருகிறது. இதே போன்று இங்குள்ள இந்துக்கள் ரமலான் மாதத்தில் நோன்பு கடைப்பிடிக்கிறார்கள்.

இங்குள்ள இந்து குடும்பங்கள் பலவும் தினமும் 5 முறை தொழுகை நடத்துவதையும், பாகிஸ்தானில் உள்ள சிந்து நகருக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த கிராமங்களில் வசிக்கும் இந்து- இஸ்லாமிய மக்கள் ஒருவர் மற்றொருவரின் பண்டிகைகளை கொண்டாடுவதும், தங்களின் சுக, துக்கங்களை பகிர்ந்து கொண்டிருப்பதாக அங்கு வசிக்கும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.