Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 15, 2016

ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம்... பச்சமுத்து மீது அவதூறு வழக்கு!


சென்னை: பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

சென்னை ஜார்ஜ் டவுனில் உள்ள பெருநகர 15-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், பா.ம.க.வின் வட சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சத்திய நாராயணன் என்பவர், பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் அறிக்கை வெளியிட்டதாகக் கூறி, எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் பச்சமுத்துவுக்கு எதிராக அவதூறு வழக்கு   தாக்கல் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவில், ''வன்னியர் சங்கத்திலும், பா.ம.க.விலும் கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு பொறுப்புகளை நான் வகித்துள்ளேன். தமிழ் நாளிதழ்களில், கடந்த 11-ம் தேதி பச்சமுத்து சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது இரண்டு திராவிட கட்சிகளுக்கும் இணையாக செய்தித்தாள்களில் கோடி கோடியாக பணம் செலவழித்து பா.ம.க. விளம்பரம் செய்ததே, அதற்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை தெரிவிக்க முடியுமா பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தனது கட்சிக்காரர்கள் மூலம் பணம் கேட்டு தன்னிடம் கை நீட்டியதாகவும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான அவதூறான கருத்துகளாகும். இந்தக் கருத்தால் பா.ம.க.வின் ஒவ்வொரு தொண்டனுக்கும், பொது மக்கள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துயுள்ளது. மேலும், இது பா.ம.க.வின் நிறுவனர் ராமதாஸின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளது. எனவே, பொய் குற்றச்சாட்டுக்களை முன் வைத்து அறிக்கை வெளியிட்ட பச்சமுத்து மீது, இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ராமதாசின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக உரிய இழப்பீட்டினை பச்சமுத்துவிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும்" என்று கோரி இருக்கிறார்.

நீதிபதி ஈஸ்வர மூர்த்தி முன் நேற்று தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு மீதான விசாரணை, வருகின்ற 24 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.