ரிசர்வ் வங்கி கவர்னராக தான் மறுநியமனம் செய்யப்படுவாரா என்பது தொடர்பான யூகங்களை சுட்டிக் காட்டி ஊடகங்களை ரகுராம் ராஜன் விமர்சித்துள்ளார்.
மும்பையில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நிதிக் கொள்கை ஆய்வு கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த ரகுராம் ராஜன், "வரும் செப்டம்பர் மாதத்துடன் எனது பணிக்காலம் முடிவடைகிறது. அதன் பின்னர் எனது பணிக்காலம் நீடிக்கப்படும் என்பது ஊடக விவாத பொருளாக ஆகியிருக்கிறது.
பல்வேறு யூகங்களும் இது தொடர்பாக வெளியாகி வருகின்றன. எனவே இதுதொடர்பாக இப்போதே ஏதாவது கூறி ஊடகங்களின் மகிழ்ச்சியை நான் குலைக்க விரும்பவில்லை.
எது நடந்தாலும், அது நிகழ்ந்தபின் ஊடகங்களுக்கு நிச்சயம் தெரியவரும். எனவே அதுவரை சுவாரஸ்ய யூகங்கள் தொடரட்டும். மேலும், எனது மறு நியமன விவகாரம் குறித்து பிரதமர் மோடியும், நிதியமைச்சர் அருண் ஜேட்லியும் அளித்துள்ள விளக்கமே போதுமானதாகக் கருதுகிறேன்" என்றார்.
ஆன்லைனில் குவியும் மனுக்கள்:
ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆன்லைனில் மனுக்கள் குவிகின்றன.
இக்கோரிக்கையை வலியு றுத்தி நடத்தப்படும் கையெழுத்து இயக்கத்தில் இதுவரை 60 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
பொருளாதார நிபுணரான ராஜன், ரிசர்வ் வங்கி வட்டாரத் தில் ஜேம்ஸ் பாண்ட் என்றழைக் கப்படுகிறார். இவரது மூன்றாண்டு பதவிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.
இவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கப்படலாம் என்று சிலரும், கிடைக்காது என்று சிலரும் கூறி வருகின்றனர். இந்த விஷயத்தில் பாஜக மாநிலங்களவை உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ராஜனை நீக்க வலியுறுத்தியுள்ளார். இதனால் இந்த விவகாரம் மிகுந்த விவாதப் பொருளாகிவிட்டது.
ராஜனுக்கு பதவி நீட்டிப்பு அளிக்க வலியுறுத்தி ஆன்லைன் கையெழுத்து வேட்டையை சேஞ்ச்.ஓஆர்ஜி நிறுவனம் நடத்தியது.
இதில் 60 ஆயிரம் பேர் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இதில் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் பலாரியா என்பவர் மேற்கொண்ட ஆன்லைன் கையெழுத்து மனுவில் 57 ஆயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர்.
இதுபோல தனி நபர்கள் நடத்திய கையெழுத்து இயக்கம் சார்ந்த மனு, இணையதளத்துக்கு இதுவரை 7 வந்துள்ளன.
ராஜன், பழமை பொருளாதார சித்தாந்தத்தில் இருப்பவர் என்பதால் அவருக்கு பதவி நீட்டிப்பு அளிக்கக் கூடாது என்று கூறப்பட்ட ஆன்லைன் மனுவில் 15 பேர் மட்டுமே கையெழுத்திட்டுள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.