Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 21, 2016

ராஜன் அறிவிப்பு எதிரொலி: இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து மீண்டது


இரண்டாவது முறையாக ரிசர்வ் வங்கி கவர்னராக நீடிக்க விரும்பவில்லை என்று ரிசர்வ் வங்கி ஊழியர்களுக்கு ரகுராம்ராஜன் எழுதிய கடிதத்தின் எதிரொலியாக இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

நேற்று  (திங்கள்கிழமை) காலை வர்த்தக துவக்கத்தின்போது, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 காசுகள் சரிந்து ஒரு டாலர் ரூ.67.69 என்ற நிலையில் இருந்தது. கடந்த ஒரு மாத காலத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவு குறைந்ததில்லை.

இறக்குமதியாளர்கள் மத்தியில் டாலருக்கான தேவை அதிகரித்துள்ளதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர். இதேபோல் பங்குச்சந்தையில் சென்செக்ஸ் சரிவை சந்தித்தது.

சரிவில் இருந்து மீண்டது:

வர்த்தக நேர துவக்கத்தில் சென்செக்ஸ் மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரிவுடன் தொடங்கினாலும் பின்னர் சரிவில் இருந்து மீண்டது. காலை 10 மணியளவில் சென்செக்ஸ் சரிவில் இருந்து மீண்டது. அப்போதையை நிலவரப்படி சென்செக்ஸ் 26,693.63 புள்ளிகளில் வர்த்தகமாகியது. இந்திய ரூபாயின் மதிப்பும் 67.65 என்ற நிலையில் இருந்து 20 காசுகள் உயர்ந்து 67.95 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.