Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 2, 2016

'தமிழ் மொழியின் தஞ்சை ஊற்று...ஆனா ரூனா பற்றி நெஞ்சை உருக்கும் புஷ்பவனத்தின் பாடல்' வீடியோ


தமிழ்ச் சான்றோர் பேரவை மற்றும் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் என்று தமிழ் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து, தமிழ் வளர்த்த கொடையாளர் நா.அருணாசலம் அண்மையில் மறைந்தார். அவரின் தமிழ்மொழிப் பற்றும் தமிழ் வளர்த்த பாங்கும் என்றென்றும் தமிழர்கள் மனதைவிட்டு நீங்காது.

கடந்த மே மாதம் 23ம் தேதி, 'ஆனா ரூனா' என்று தமிழ் ஆர்வலர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நா.அருணாசலம், சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள அவரின் இல்லத்தில் மரணத்தைத் தழுவினார். எப்போதும் தமிழ் மொழியின் மீதான பற்றை வெளிப்படுத்தி, அருகில் இருப்பவர் எவரையும் தமிழ்ப்பற்றாளராக மாற்றிக் காட்டும் வல்லமை கொண்ட ஆனா ரூனா,மரண நேரத்திலும் தமிழிசை மணக்க இயற்கை அடைந்தார்.

சாருகேசி ராகத்தில், கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய ' தமிழ் மொழியின் வேரில் பாயும் தஞ்சை ஊற்று நீ' என்ற பாடலை, தமிழிசைப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி பெருங்குரலெடுத்துப் பாட...தமிழ் இசை கேட்டபடியே ஆனா ரூனாவின்  உயிர் பிரிந்தது.

இணையத்தில் வைராலாகியுள்ள அந்தப் பாடல்,  விகடன் வாசகர்களுக்காக  இங்கே....

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.