Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 7, 2016

புதுச்சேரி முதலமைச்சராக பொறுப்பேற்ற நாராயணசாமி சலுகை அறிவிப்புகள் வெளியீடு


புதுச்சேரியில் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நாராயணசாமி, சலுகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, ரேஷனில் 10 கிலோவாக இருந்த இலவச அரிசி விநியோகம், 20 கிலோவாக உயர்த்தப்படுகிறது.

வீடுகளில் மின் பயனீட்டாளர்கள் பயன்படுத்தும் 1‌00 யூனிட் மின்சாரத்தில் 50 சதவிகித கட்டணத் தள்ளுபடியையும் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி முதலமைச்சராக நாராயணாமி இன்று பதவியேற்றுக்கொண்டார். கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.