Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 13, 2016

கர்ப்பம் அடைத்ததை உணர்த்தும் பெண்களின் மார்பகம்


பிரசவத்தின் வலியும், அதன் பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மாற்றங்களும் கருத்தரித்த நாள் முதலே தொடங்கிவிடுகிறது. முக்கியமாக மாதம் அதிகரிக்க அதிகரிக்க உடல் ரீதியாக அவர்கள் பல மாற்றங்களை சந்திக்க நேரிடும். இம்மாற்றங்களில் மற்றவர் உன்னிப்பாக கவனிக்கும் வகையில் இருப்பது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் தான்.

கருத்தரித்த பெண்கள் பலருக்கே அவர்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கு கர்ப்பமாக இருப்பது தான் காரணம் என்று தெரியாது. மற்றும் நீங்கள் கருத்தரித்து உள்ளீர்கள் என்பதை கூட முன்கூட்டியே உங்களது மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை வைத்து தெரிந்துக் கொள்ளலாம்...

நீங்கள் கருத்தரித்துவிட்டால் மாதவிடாய் ஏற்படாது. இந்த காரணத்தால் உங்கள் மார்பகங்கள் பெரியதாகின்றன. எனவே, இதை வைத்தே நீங்கள் கருவுற்று இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துவிடலாம். இவ்வாறு மார்பகங்கள் திடீரென பெரியதாவதை கண்டால் வீட்டில் உள்ள பெரியவர்கள் எளிதாக பெண்கள் கருவுற்றுவிட்டார்கள் என்பதை அறிந்துக் கொள்வார்கள்.

மாதாமாதம் வயிறு மட்டுமின்றி, அவரவர் உடல்நிலையை பொறுத்து மார்பகங்களும் பெரியதாகும். இதனால் நீங்கள் கருவுற்றிருக்கும் நாட்களில் இரண்டு, மூன்று முறையாவது உள்ளாடைகள் அளவு மாறுவதால் புதிது வாங்க வேண்டி வரும்.

கர்ப்பிணி பெண்களுக்கு அவர்களது மார்பகங்களில் நமைச்சல் மற்றும் கூச்சம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கர்ப்பமாக இருக்கும் பெண்களின் மார்பகங்களில் நீலநிற நரம்பிகள் தென்படும் வாய்ப்புகள் இருக்கிறது. இது சாதாரண ஒன்று தான்.

மார்பகங்கள் பெரிதானால், அதற்கேற்ற உள்ளாடை மாற்றி அணியுங்கள். இல்லையேல் மூச்சுவிட சிரமமாகவும், பால் சுரப்பதை தடுக்கும் வகையிலும் அமைந்துவிடும்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.