Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 22, 2016

குஜராத்: யோகா முகாமில் பங்கேற்ற 1,632 கர்ப்பிணிகள் புதிய உலக சாதனை படைத்தனர்


குஜராத் மாநிலம், ராஜ்கோட் நகரில் ஒரே இடத்தில் 1,632 கர்ப்பிணிகள் பங்கேற்ற யோகாசன முகாம் புதிய உலக சாதனை படைத்துள்ளது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி  நாடு முழுவதும் சுமார் ஒரு லட்சம் இடங்களில் கூடிய ஒன்றேகால் கோடிக்கும் அதிகமான மக்கள் யோகாசனத்தில் ஈடுபட்ட நிலையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத் நகரில் அம்மாநில முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேல், கவர்னர் ஓ.பி.கோலி, மாநில மந்திரிகள், அரசு மற்றும் காவல்துறை உயரதிகாரிகள், பா.ஜ.க. தொண்டர்கள், பொதுமக்கள் என சுமார் 30 ஆயிரம் பேர் பங்கேற்ற மாபெரும் யோகாசன சிறப்பு முகாம் நடைபெற்றது.


இதேபோல், பிரதமர் நரேந்திர மோடி பிறந்த இடமான குஜராத் மாநிலத்தில் சுமார் 40 ஆயிரம் இடங்களில் இன்று யோகாசன முகாம்கள் நடத்தப்பட்டன. ராஜ்கோட் நகரில் உள்ள திடலில் இன்றுகாலை 1,632 கர்ப்பிணிகள் பங்கேற்ற யோகாசன முகாம் புதிய உலக சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக முதல் மந்திரி ஆனந்தி பென் பட்டேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.




இதே திடலில் சுமார் 8 ஆயிரம் மாணவர்கள் இணைந்து இன்று உருவாக்கிய மனித சங்கிலி மேலும் ஒரு உலக சாதனையை படைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.