சென்னை,
புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை என்று நாராயணசாமி தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு
புதுச்சேரியில் காங்கிரஸ்–தி.மு.க. கூட்டணி ஆட்சியை பிடித்தது. முன்னாள் மத்தியமந்திரி நாராயணசாமி புதுச்சேரி முதல்–மந்திரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பதவியேற்பு விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் தமிழக எதிர்க்கட்சி தலைவரும், தி.மு.க. பொருளாளருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு, வாழ்த்து தெரிவித்தார்.
இந்தநிலையில், புதுச்சேரி முதல்–மந்திரி நாராயணசாமி நேற்று காலை தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, தமிழக–புதுச்சேரி அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் இருவரும் விவாதித்தனர்.
பின்னர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து வெளியே வந்த நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
ஆதரவு
புதுச்சேரி மாநில முதல்–மந்திரியாக நான் பதவி ஏற்ற போது நேரில் வந்து வாழ்த்திய தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அவரை சந்தித்து பேசினேன். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக நாங்கள் எடுக்கும் முயற்சிக்கு தி.மு.க. எப்போதும் ஆதரவு அளிக்கும் என்று அவர் என்னிடம் தெரிவித்தார். மத்திய அரசிடம் இருந்து புதுச்சேரி மாநிலத்துக்கு அதிக நிதி பெற்று பல நல்ல திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் நாங்கள் பேசினோம்.
புதுச்சேரி மாநிலத்தில் தொழில் வளம் மற்றும் வேலை வாய்ப்பை பெருக்கவும் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவல் துறையை நவீனமயமாக்கவும் திட்டமிட்டுள்ளோம். இது போன்ற திட்டங்களுக்காக தி.மு.க.விடம் ஆதரவை கேட்டேன். அனைத்து ஒத்துழைப்பையும் தருவதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.
மதுவிலக்கு
புதுச்சேரி மாநிலத்தில் நடைபாதைகளில் நிறைய கடைகள் இருப்பதால் நடந்து செல்லும் மக்களுக்கு இடையூறு ஏற்படுவதாக புகார்கள் வருகிறது. இந்த நடைபாதை கடைகளை அகற்றி அவர்களுக்கு கடை அமைக்க மாற்று இடம் வழங்கலாமா? என்பது பற்றி ஆலோசிக்க நாளை(இன்று) புதுச்சேரியில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் வியாபாரிகள் பொதுமக்கள் போலீசாரின் கருத்துக்களை கேட்டு அதற்கேற்ப முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அவரிடம் நிருபர்கள், ‘தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவது போல் புதுச்சேரியில் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமா?’ என்று கேட்டனர். இதற்கு பதில் அளித்த நாராயணசாமி, ‘புதுச்சேரியில் மதுவிலக்கு சாத்தியமில்லை’ என்று தெரிவித்தார்.
வாழ்த்து
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் புதியதாக நியமிக்கப்பட்ட நெல்லை மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதேபோல், தி.மு.க. மகளிரணி செயலாளர் கவிஞர் கனிமொழியையும் அவர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.