Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.

June 16, 2016

புதுச்சேரியில் தொடங்கியது புதுவகை அரசியல்: ஒரே நாளில் முதல்வர், ஆளுநர் போட்டி ஆய்வு


புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப் பேற்றது முதல் பல நடவடிக் கைகளில் இறங்கியிருக்கிறார். குப்பைகள் அள்ளுதல், திடீர் ஆய்வு, மக்கள் நேரடியாக ஆளுநரிடமே மனு தருதல், துறைவாரியாக கூட்டம் நடத்துதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.

முதல்வராக நாராயணசாமி பொறுப்பேற்றதும் நீண்டநாட் களாக நடைபெற்று வரும் மேம்பால பணிகளைப் பார்வையிட்டு துரிதப்படுத்தினார். அமைச்சர்கள், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி பல பணிகளை விரைந்து செயல்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் முதல்வர் நாராய ணசாமி, கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் ஆகியோர் நேற்று காலை 9 மணியளவில் லாஸ் பேட்டையில் உள்ள வள்ளலார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி களுக்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நாவலர் நெடுஞ்செழியன் பள்ளி யில் மாணவர்களின் கழிப்பிடங் களுக்குச் சென்று சுத்தமாக இருக் கிறதா என்று பார்வையிட்டனர். ஒரு வகுப்பறைக்குச் சென்ற முதல்வர் நாராயணசாமி, ஆசிரியர் ஒருவர் பாடப் புத்தகத்தைப் படித்து சொல்லி கொடுப்பதை கண்டார். ‘‘மாணவர்களையே புத்தகத்தை படிக்கச் செய்து கற்றுக் கொடுத்தால் நன்றாக இருக்குமே!’’ என்று ஆலோசனை வழங்கினார். ஆசிரியர்கள் நவீன காலத்துக்கு ஏற்ப தங்களது அறிவையும், கற்பித்தல் திறனையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதன்பின்னர் அங்குள்ள சமையல் கூடத்துக்கும் சென்றார். அங்கு நடைபெறும் பழுது பார்க்கும் பணி பற்றி கேட்டறிந்தவர் ‘‘இது போல முக்கியத் துறைகளில் இனி அடிக்கடி ஆய்வு நடக்கும்’’ என்று நாராயணசாமி குறிப்பிட்டார்.

இந்நிலையில் பகல் 12 மணியள வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, நகர பகுதி யில் உள்ள சவரிராயலு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளிக்கு திடீரென விசிட் அடித்தார். அங்கு வகுப்பறைகளை ஆய்வுசெய்த அவர், மாணவிகளுக்கு நல்லொழுக் கக் கதையை பாடமாக எடுத்தார். இனி, தினமும் பகல் 12 மணி முதல் 1 மணி வரை அரசு துறைகளுக்குச் சென்று ஆய்வுசெய்ய உள்ளதாக தெரிவித்துவிட்டு புறப்பட்டார்.

ஒரே நாளில் முதல்வர், ஆளுநர் தனித்தனியாக கல்வித்துறையில் ஆய்வு செய்துள்ளது தொடர்பாக அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கூறிய தாவது:

"புதுச்சேரி, காரைக்காலில் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் கடந்த சில ஆண்டுகளாக குறைந்துள்ளது. அதற்கு முறை யான நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆய்வுசெய்யாமல் வகுப்பறையும் இல்லாமல், ஆசிரி யர்களும் இல்லாத கிராமப் பகுதிகளில் முதல்வரும், துணை நிலை ஆளுநரும் இப்படி போட் டிப் போட்டுக்கொண்டு திடீர் ஆய்வுசெய்தால் கல்வித் துறை யின் உண்மை நிலை தெரியவரும். அதனால் அப்பகுதி மாணவர்களின் நிலையும் உயரும்" என்று குறிப் பிட்டனர்.

சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறும்போது, "முதல்வர், ஆளுநர் இடையில் போட்டி தொடங்கியுள்ளது போல்தான் தோன்றுகிறது. கடந்த சில ஆண்டு களாக பணியே நடக்காமல் இருந்த புதுச்சேரியில் இந்த மாதிரியான உத்வேகமான நடவடிக்கைகள் சில நம்பிக்கைகளை விதைக்கிறது. ஆனால், இது நாளடைவில் அதி காரப் போட்டியாக மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் வளர்ச்சித் திட்டங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு துணைநிலை ஆளுநர், முதல்வர் இடையேயான தன் முனைப்பே முன்நிற்கும்" என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.