ஓசூர் அருகே நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க முயன்ற போலீசாருக்கு சரமாரி கத்திக்குத்து விழுந்துள்ளது. இதில், ஒரு காவலர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து உள்ளார்.
ஓசூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் ஆசிரியை பார்வதி. இவர், வழக்கம்போல் உத்தனப்பள்ளி அரசு துவக்க பள்ளியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்திவிட்டு நேற்று மாலை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
உத்தனப்பள்ளி கிரானைட் கம்பெனி அருகே அவர் வந்து கொண்டிருந்தபோது, 2 இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், பார்வதி வாகனத்தின் மீது மோதுவதுபோல் வந்து அவர் அணிந்திருந்த நகையை பறித்துக் கொண்டு ஓடி இருக்கிறார்கள்.
இதில் அதிர்ச்சி அடைந்த பார்வதி, உடனே உத்தனப்பள்ளி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதைத் தொடர்ந்து, அங்கிருந்த காவலர்கள் உடனே வாக்கி டாக்கி மூலம் ஓசூர் போலீசாருக்கு தகவல் கொடுக்க, ஓசூர் போலீஸ் எஸ்.ஐ. நாகராஜ், தலைமை காவலர் முனுசாமி, கான்ஸ்டபிள் தனபால் ஆகிய 3 வரும் ஓசூர் பாரதிதாசன் நகர் பகுதியில் பதுங்கி இருந்த 4 மர்ம நபர்களையும் மடக்கி பிடித்தார்கள்.
அப்போது, அந்த 4 பேரும் தாங்கள் மறைத்து வத்திருந்த கத்தியால் எஸ்.ஐ. ,நாகராஜையும், தலைமை காவலர் முனுசாமியையும் சராமரியாக வயிற்றில் குத்தி இருக்கிறார்கள். இதை கண்ட கான்ஸ்டபிள் தனபால், ஓடி போய் தடுத்திருக்கிறார். ஆனால் அவர்கள், தனபாலையும் கையில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.
இதையடுத்து, படுகாயம் அடைந்த காவலர்கள் அனைவரும் சிகிச்சைக்காக உடனடியாக ஓசூர் குணம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். இதில் ஆபத்தான நிலையில் இருந்த நாகராஜ் மற்றும் முனுசாமி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனால், மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் தலைமை காவலர் முனுசாமி பரிதாபமாக உயிரிழந்து உள்ளார். நாகராஜ் இன்னும் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அந்த 4 மர்ம நபர்களும் கர்நாடகவை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதால், போலீசார் அவர்களை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர்.
பிடிபட்ட ஒருவர் மர்மச்சாவு
இந்நிலையில் போலீசை கத்தியால் குத்திக் கொன்ற 4 பேரில் ஒருவரான புஜ்ஜிபாபு என்பவரை ஓசூர் போலீஸார் பிடித்து விசாரித்து வந்த நிலையில், மர்மமான முறையில் அவர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.