ரோட்டில் சுற்றித் திரிந்த சிறுவர்களை பிடித்து பள்ளியில் சேர்த்து விடும் பணியில் காங்கேயம் போலீஸ் அதிகாரி ஒருவர் ஈடுபட்டு வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பகுதியில் ஏராளமான நாடோடி மக்கள் வசித்து வருகின்றனர். கூடை பின்னியும், ரோட்டில் பேப்பர் ,பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து அதில் வரும் வருமானத்தை வைத்தும் கஷ்ட ஜீவனம் நடத்தும் இவர்கள், குழந்தைகளை மருந்துக்கு கூட பள்ளி பக்கம் அனுப்புவது கிடையாது. இது போன்ற நாடோடி வகுப்பை சேர்ந்த ஏராளமான குழந்தைகள், காங்கேயம் நகரம் முழுவதும் சுற்றி வந்து பிச்சையெடுப்பதையும் காண முடியும்.
இப்படி ஆங்காங்கே சுற்றித் திரிந்த சிறுவர்களை, காங்கேயம் போலீஸ் எஸ்.ஐ சாஸ்தான் இந்து சேகரன் பிடித்து விசாரித்தார். அப்போது சிறுவர்களின் நிலையை அவர் தெரிந்து கொண்டார். பின்னர் அந்த சிறுவர்களின் பெற்றோர்களைப் பற்றி விசாரித்தார். தொடர்ந்து குழந்தைகளின் பெற்றோர்களிடம் சாஸ்தா இந்து சேகரன் பேசினார். அவர்களிடத்தில் சிறுவர்களை படிக்க வைப்பதன் அவசியத்தையும் எடுத்துக் கூறினார்.

பெற்றோர் சம்மதத்துடன் முதல்கட்டமாக மகாலட்சுமி என்ற சிறுமியையும், ரஞ்சித், மாணிக்கம் என்ற சிறுவர்களையும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளியில் சேர்த்து விட்டார். அவர்களுக்கு புதிய உடைகள், வேண்டிய பாடப்புத்தகங்களையும் சாஸ்தா இந்து சேகரன் வாங்கிக் கொடுத்து உதவியுள்ளார்.
இதனை பார்த்த மற்ற சிறுவர்களின் பெற்றோர்களும், தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முடிவுக்கு வந்துள்ளனர். அவர்களையும் விரைவில் பள்ளியில் சேர்த்துவிட எஸ்ஐ சாஸ்தா இந்து சேகரன் முடிவு செய்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.