மாநகராட்சி மேயர்களை, மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளின் மேயர்களை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்யும் முறை இப்போது நடைமுறையில் உள்ளது.
அதைமாற்றி, கவுன்சிலர்கள் மூலமாக மேயரை தேர்வு செய்யும் மறைமுகத்தேர்தல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதை கைவிட வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
நேரடித்தேர்தல் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம். மாநகராட்சிகள் உள்ளிட்ட நகர அமைப்புகளிலும் ஒன்றிய பெருந்தலைவர், பஞ்சாயத்து தலைவர் முதலான ஊரக அமைப்புகளிலும் நேரடித்தேர்தல் முறையே வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
மேலும் மெய்யான ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கு எல்லா மட்டங்களிலும் தலைவர் பொறுப்புகளை நேரடித்தேர்தல் முறையிலேயே தேர்வு செய்ய வேண்டும்" என்று கூறி உள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் அவர்களுடைய கருத்துக்களே.